Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூவத்தூர் பல கோடி பேரம்.. ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் பேரம் நடத்தியது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரகசிய வாக்கெடுப்பு கோரி நீதிமன்றத்திலும் திமுக மனு தாக்கல் செய்திருந்தது.

 Governor ordered to take action for Stalin's complaint about trust Vote

கடந்த வாரம் தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ரகசிய கண்காணிப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது அம்பலமானது. இதனிடையே மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபை கூடியது. அப்போது கூவத்தூர் பேரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆதாரத்துடன் கோரியும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முக ஸ்டாலின் கடந்த சனிக்கிழை சந்தித்தார். அப்போது கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதால் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளதால் அதிமுக அரசை கலைத்து விட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் மனு அளித்தார். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தினார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் சென்றனர்.

இந்நிலையில் ஸ்டாலின் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் அளித்துள்ள சி.டி. ஆதாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+