காசு எதிர்பார்க்கும் கமல் சமுதாயம் பற்றி பேசக்கூடாது... பொங்கும் எச்.ராஜா!
காசிற்காக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக் கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : சினிமாவில் காசு சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக் கூடாது என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்சியில் பேசிய எச்.ராஜாவிடம் கமல்ஹாசனை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சிப்பது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார், அதற்கு எச். ராஜா சினிமாவில் காசு சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக்கூடாது என்கிறார்.

கமல் அரசியலுக்கு வந்தால் திமுகவிற்குத் தான் ஆபத்து. நாத்திக, இந்து விரோத கொள்கையுடைய கமல்ஹாசனை அரசியலுக்கு தூண்டிவிட்டு அவரை தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்ள நினைத்தால் அது திமுகவிற்குத் தான் ஆபத்து.
திமுகவிற்கு ஆபத்து என்றால், ராஜாவிற்கு மகிழ்ச்சி. கமல் தாராளமாக அரசியலுக்கு வரட்டும், தனிக் கட்சித் தொடங்கட்டும் ஓட்டுகளைப் பிரிக்கட்டும், அது எப்போதும் பாஜகவிற்கு சாதகமாகத் தான் இருக்கும். குண்டர் சட்டத்தில் ஒரு சிலரை போட வேண்டும் என்று வலியுறுத்தும் எச். ராஜா தான், சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கிறார் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் போடலாமா என்று தொகுப்பாளர் கேட்க, என்ன நக்கலாக கேட்கிறார் எச். ராஜா.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதாவது நான் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் முன்னரே அவரை விமர்சித்திருந்தார் எச்.ராஜா. முதுகெலும்பில்லாதவர் கமல் கோழை ன்றெல்லாம் பேசியதற்காகத் தான் எலும்பு சிகிச்சை வல்லுநர் ராஜா என்று கமல் கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவரை சீண்டி ராஜா பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications