Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன் - நெடுவாசலுக்கு "டிடி" ஆதரவு

என் கிராமத்து மக்களுக்கு ஆதராவாக நான் துணை நிற்பேன் என்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து டிவி தொகுப்பாளினி டிடி பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் சம்மதமின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று விஜய் டிவி தொகுப்பாளினி கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் அப்பா ஊர் பேராவூரணி, என் கிராம மக்களுக்கு நான் துணை நிற்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15ஆம் தேதி அனுமதி அளித்தது.
விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 13வது நாளாக நெடுவாசல் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

பிரபலங்கள் ஆதரவு

பிரபலங்கள் ஆதரவு

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர் பச்சான், பாண்டிராஜ் ஆகியோர் ஆதரவு கொடுத்துள்ளனர். பாண்டிராஜ் நேரடியாக நெடுவாசலுக்கு சென்று போராட்டம் நடத்தினார். கிராம மக்களிடையே பேசி ஆதரவை பதிவு செய்தார். அரசியல் கட்சித்தலைவர்களும் ஆதரவினை பதிவு செய்து வருகின்றனர்.

நெடுவாசலைக் காப்போம்

சமூக வலைத்தளங்களில் # save neduvasal என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பல இளைஞர்கள், மாணவர்கள் நெடுவாசலுக்கு சென்று போராடி வருகின்றனர்.

டிடி ஆதரவு

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், "ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும். அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

என் கிராம மக்கள்

விவசாயிகள் இதுபற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என் தந்தை பிறந்த பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன் என்று கூறியுள்ளார். இவரது பதிவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

நெடுவாசல் வாங்க

நெடுவாசல் வாங்க

கிராம பாசத்தில் பதிவிட்ட டிடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள இளைஞர்கள், நெடுவாசலுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவியுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர். கிராம மக்களுக்காக போராட்டத்தில் பங்கேற்க நெடுவாசலுக்கு டிடி செல்வரா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+