தமிழர்கள் ஒற்றுமை வென்றது.. அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: வாடிவாசல் திறந்தால்தான் நாங்கள் வீட்டு வாசலை திறப்போம் என்று போராடிய மக்களின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வாய் பிளந்து நிற்கப்போகிறது.

ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications