Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடநாடு கொலை வழக்கு... சயான் கைது...வழக்கில் திருப்பம் ஏற்படுமா? - வீடியோ

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், அங்கு பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

 In Jayalalitha's kodanadu estate bunglow murder case, prime accused Sayan arrested

இந்த வழக்கில் மொத்தம் 11 பேருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். சயான் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கோவையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உடல் நலம் தேறியதால், கோத்தகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் முக்கிய திருப்புமுனை தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+