Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மறைந்த 60 நாட்களுக்கு பிறகு திடீர் விளக்கம்! அதே பல்லவியை பாடிய லண்டன், அப்பல்லோ டாக்டர்கள்!!

ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகும் அவருக்கு தரப்பட்ட சிகிச்சை விவரங்களை மீண்டும் மீண்டும்தான் அப்பல்லோ மருத்துவர்கள் ஒப்புவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் இன்று திடீரென செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பாடிய அதே பல்லவியை இன்றும் அப்பல்லோ மருத்துவர்கள் பாடினர்.

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால், சிங்கப்பூர் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

London Dr Richard to meet Media today?

ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பபட்டு வருகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அமைதி காத்துவந்தது.

ஆனால் அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மரணத்தில் எந்த சர்ச்சையுமே இல்லை என்றார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் திடீரென இன்று சென்னை வருகை வந்தார். தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க உள்ள நிலையில் ஜெயலலிதாவின் மரண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே ரிச்சர்ட் வரவழைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள், ரிச்சர்ட் பியால் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது செப்டம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை என்னவெல்லாம் அப்பல்லோ நிர்வாகம் ஒப்புவித்ததோ அதையே திரும்பவும் கூறினர்.

இச்சந்திப்பில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்; சிற்றுண்டி சாப்பிட்டார் என 60 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதையே ஒப்புவித்தனர். அத்துடன் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் முக்கியமான சந்தேகமான கால்கள் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் கால்கள் வெட்டி எடுக்கவில்லை என விளக்கம் தந்தனர்.

அத்துடன் ஜெயலலிதா சுயநினைவுடனேயே தேர்தல் ஆணையத்துக்காக கடிதத்தில் கை ரேகை வைத்தார் எனவும் விளக்கம் தரப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் உடல் பதப்பட்டது தொடர்பாகவும் டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் முகத்தில் 3 புள்ளிகள் இருந்தது என்பது, நீண்டகாலமாக மருத்துவமனையில் இருந்ததால் ஏற்படக் கூடியது எனவும் விளக்கம் தரப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் இன்று திடீரென செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பாடிய அதே பல்லவியை இன்றும் அப்பல்லோ மருத்துவர்கள் பாடினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+