Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்து, தனுஷ் பாடிய "அம்மா அம்மா" உங்களுக்காக.. ஓ.பி.எஸ் உண்ணாவிரதத்தில் கலகல!

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணைக் கேட்டு நடைபெறும் உண்ணாவிரதப் பந்தலில் அம்மா... அம்மா நீ எங்க அம்மா என தனுஷ் பட பாடல் ஒளிபரப்பாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்ட பந்தலில் ஜெயலலிதாவை போற்றும் வகையில் அம்மா பாடல்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், அது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அம்மாவிற்கு அஞ்சலி

அம்மாவிற்கு அஞ்சலி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பந்தலில் பங்கேற்றுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிச்சைக்காரன் திரைப்படத்தில் இருந்து, நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா என்ற பாடல் ஒளிபரப்பாகி வருகிறது.

தனுஷ் பட பாடல்

தனுஷ் பட பாடல்

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் எழுதிய அம்மா அம்மா நீ எங்க அம்மா.... பாடலும் ஓபிஎஸ் உண்ணாவிரதப் போராட்ட பந்தலில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்படுகின்றது.
அம்மா இறந்த பின்னர்தான் அவரது அருமை தெரியும் என்பதை அதிமுகவினருக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.

எங்கும் அம்மா மயம்

எங்கும் அம்மா மயம்

ஜெயலலிதா உயிரிழந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவரது மரணத்தில் உள்ள மர்மத்திற்கு நீதி கேட்கும் வகையில் பல புகைப்படங்களை உண்ணாவிரத மேடைப் பந்தலில் வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஏராளமானோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

36 இடங்களில் போராட்டம்

36 இடங்களில் போராட்டம்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தமிழகம் மற்றும் புதுவை உள்பட சுமார் 36 இடங்களில் ஓ.பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்ட மேடையில், பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+