Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளங்காத சென்னை விமான நிலையம்... 39வது முறையாக கண்ணாடி உடைந்தது.. ஊழியர் காயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வானிலை அறிக்கை.. வெப்பநிலை அறிக்கை சொல்வது போல ஆகிவிட்டது சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் விபத்து குறித்த செய்தி.

ஒருநாள் கண்ணாடி உடைந்தால் மறுநாள் கிரானைட் சுவர் பெயர்ந்து விழுகிறது.. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது... இப்படி நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதுவரை வெளியில் தெரிந்து 39 விபத்து நடந்து விட்டது. இனி தெரியாமல் எத்தனை நடந்துள்ளதோ. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் அசால்டாகவே பதில் சொல்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள் என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது.

Panels continue to break at Chennai airport

உடைந்த கண்ணாடி கதவு

இதுவரை பல விபத்துக்கள் நடந்திருந்தாலும் நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில், ஊழியர் ஒருவர் காயமடைந்தார். 39-வது முறையாக நடந்த இந்த விபத்தில் ஊழியர் காயமடைந்தது முதன்முறையாகும்.

ரூ.2000 கோடி விரிவாக்கம்

சென்னை விமான நிலையம் சுமார் ரூ.2000 கோடியில் விரிவாக்கம் செய்தும் மற்றும் புதுப்பித்தும் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. விமான நிலையத்தின் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் பதித்த பிரம்மாண்ட சுவர், தடுப்புகள் மற்றும் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன.

உடையும் பொருட்கள்

விமான நிலையம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே கண்ணாடி கதவுகள், மேற்கூரை கண்ணாடிகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்தும் பெயர்ந்தும் விழத்தொடங்கின. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 2-வது நுழைவு வாயில் உட்புறம் தானியங்கி கண்ணாடி கதவு (12 அடி உயரம், 4 அடி அகலம்) திடீரென உடைந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

39வது விபத்து

இந்நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு புறப்பாடு பகுதியில் உள்ள 3-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவை (12 அடி உயரம், 3 அடி அகலம்) விமான நிலைய ஒப்பந்த ஊழியர் பாலச்சந்தர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து ஊழியர் பாலசந்தர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் காயமடைந்தார். இது 39வது விபத்தாகும்.

ஊழியர் காயம்

விபத்து நடந்த இடத்திற்கு வந்த விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்த பாலசந்தரை மீட்டு விமான நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, உடைந்து விழுந்த கண்ணாடி கதவு துகள்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

அதிர்வினால் விபத்து

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘‘விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும் போதும் ஒருவிதமான அதிர்வு ஏற்படுகிறது. அந்த நேரத்தில்தான் கண்ணாடிகள், கிரானைட் கற்கள் உடைந்து விழும் சம்பவங்கள் நடக்கிறது. இதுபற்றி விமான நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்றனர்.

யார் செய்யும் வேலை

விமான நிலையத்தில் 39-வது முறையாக நடந்த இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு என்ன காரணம், ஏதாவது சதிவேலையாக இருக்கலாமோ என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சதி வேலையோ? சைத்தான் வேலையோ? உடைவது கண்ணாடி மட்டுமல்ல நம்முடைய மானமும்தான் என்பதை விமான நிலைய அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+