என் கொழந்த ஸ்மார்ட் போனிலேயே இருப்பா.. என பெருமைப்படாதீர்கள் பெற்றோர்களே.. ஒரு கண் வைங்க!
என் குழந்தை ஆன்ட்ராய்டு போனிலேயே மூழ்கிவிடுகிறார் என்று பெருமை பேசும் பெற்றோர் முதலில் இதை படியுங்கள்.
சென்னை: உயிரை குடித்து வரும் ப்ளூவேல் கேம்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தனது குழந்தை ஆன்ட்ராய்டு போனிலேயே மூழ்கிகிடக்கிறார் என்று பெருமை பேசுவதை பெற்றோர் நிறுத்திவிட்டு அவரது உயிரை காக்க முயற்சியுங்கள்.
அன்றைய காலகட்டங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆண்களுக்கு வீரம் கலந்து விளையாட்டுகளும், பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையிலான விளையாட்டுகளும் இருந்தன.
உதாரணமாக ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு, கபடி, கம்பு சுற்றுதல், சிலம்பம், மாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளும் பெண்களுக்கு கல்லாட்டம், ஸ்கிப்பிங், தாயம், பரமபதம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளும் இருந்தன.

பயத்தின் காரணமாக
இன்றைய காலகட்டங்களில் கடத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பதில்லை. அதிலும் குழந்தையையும் விட்டு வைக்காத இந்த பாலியல் தொந்தரவு உள்ளிட்டவற்றால் பெண் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

மேற்கத்திய கலாசாரம்
இதனால் உட்கார்ந்த இடத்தில் விளையாடும் விளையாட்டுகளான வீடியோ கேம்ஸகளை விளையாடி வந்தனர். தற்போது படுத்துக் கொண்டே விளையாடும் அளவுக்கு ஆன்ட்ராய்டு போன்களை கையில் எடுத்தால், கீழே வைக்காத அளவுக்கு குழந்தைகள் அதில் மூழ்கிவிடுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு குறைவு
இதுபோல் தனியாக குழந்தைகளிடம் செல்போன் கொடுத்துவிட்டு விளையாட வைப்பதால் குழந்தைகள் தவறான ஆபாச தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அதுபோன்ற சைட்டுகள் குழந்தைகளின் கண்களில் படாதபடி ஃபையர் வால் போட்டு பெற்றோர் பாதுகாத்தனர். அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

வந்துவிட்டது எமன்
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோருக்கு உயிரை குடிக்கும் எமனாக ப்ளூவேல் விளையாட்டுகள் வந்துள்ளது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கூட கண்காணிக்க இயலாத நிலையில் இன்று பணத்துக்காக ஆளாய் பறந்து வருகின்றனர்.

விபரீதம்
இதனால் தனிமையில் உள்ள குழந்தைகள் ப்ளூவேல் போன்ற உயிரை மாய்த்தும் கொள்ளும் விளையாட்டுகளில் மூழ்கிவிடுகின்றனர். இது தெரியாமல் தன் பிள்ளையிடம் ஆன்ட்ராய்டு போனை கொடுத்துவிட்டால் போதும் மணிக்கணிக்கில் அதில் மூழ்கிவிடுவான். எல்லாம் ஆப்ஷன்களும் அவனுக்கு தெரியும் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

பெருமை பேசுவதை நிறுத்துங்கள்
பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு பெற்றோர் எந்த விளையாட்டை விளையாடுகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடியாத நிலையில் பெற்றோர் தான் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர வேண்டும்.

கண்டுபிடித்தால்
இந்த ப்ளூவேல் கேம் என்பது முழுக்க முழுக்க குழந்தைகளை மூளைசலவை செய்து அடிமையாக்கும் விஷயமாகும். இதனால் மனமுடைந்த குழந்தைகள் நிச்சயம் நோட்டு புத்தகங்களில் ப்ளூவேல் படத்தை வரைந்தோ அல்லது வார்த்தையால் எழுதியோ வைத்திருப்பர். இதை கவனிக்க வேண்டும். மேலும் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை எழுந்தால் விசாரிக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் பிள்ளை ப்ளூவேல் கேம் விளையாடுவது குறித்து தெரிந்தால் அவர்களிடம் விளையாட கூடாது என்று சத்தியம் வாங்குவதை கைவிடுங்கள்.

மருத்துவரிடம்
நல்ல மருத்துவரிடம் கொண்டு போய் கவுன்சலிங் கொடுக்கத் தவற வேண்டாம். கவுன்சலிங் கொடுத்தபிறகும், குழந்தையுடனேயே இருக்க வேண்டியது அவசியம். மேலும் எந்த பிரச்சினையாக இருந்தால் தன்னிடம் சொல்ல வேண்டும். யார் மிரட்டினாலும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள்.

தைரியம் கொடுங்கள்
உங்கள் தைரியமே அவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். அப்படியே உங்க வங்கிக் கணக்கில் உள்ள பணங்களை எடுத்துவிடுவதாக அவர்கள் மிரட்டினாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தை போனால் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பாருங்கள். காசு, பணத்தை விட நீ தான் பெரிது என்று குழந்தையிடம் சொல்லுங்கள். உங்கள் கண்காணிப்பில் வெளியே விளையாட அனுமதி கொடுங்கள். இதை ஒவ்வொரு பெற்றோரும் செய்தால் ப்ளூவேல் கேம் விளையாடுவதை தடுத்துவிடலாம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications