தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு.. மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: தமிழகம் நீரில்லாமல் காய்ந்து கிடக்கிறது. பயிர்கள் கருகி இதுவரை 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டியது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் அடுத்தமாதம் 14ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications