Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக + தேமுதிக + பாஜக கூட்டணி பற்றி சுவாமி கருத்தில் எந்த தவறும் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக + தேமுதிக + பாஜக கூட்டணி ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தில் தவறும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாஜக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னை தி.நகரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொன். ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Pon Radhakrishnan said about subramanian swamy twitter

அப்போது, அவர் அளித்த பேட்டி: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக கூட்டணி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதில் எந்தவித தவறும் கிடையாது. இறுதியான கூட்டணி முடிவுகள் வரும் வரைக்கும் பலவிதமான யூகங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு தலைவர்களும் கூட எந்த எந்த முறைகளில் கூட்டணி அமைக்கப்பட்டால் தங்களுடைய கட்சிக்கு நல்லது அல்லது தமிழகத்திற்கு நன்மைக் கிடைக்கும் என்பதை பற்றி கருத்துக்களை பரிமாறுவதில் எந்தவிதமான தவறும் கிடையாது என்றார்.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கூட்டணி கருத்து பற்றி திமுக, பாஜக ஆகிய இருதரப்பும் எதிர்பார்க்காத ஒன்று.

இந்த நிலையில் சுவாமி கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறிவரும் தமிழக பாஜக இந்த விவகாரத்தில் மவுனம் சாதிப்பதும் அந்த கட்சியின் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இது குறித்து எந்த தவறும் இல்லை என்றும் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+