அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்!
சென்னை: தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், 'INSIDE ELECTION', போல் டிராக்கர் (Poll Tracker), லோக் போல் (Lok Poll) மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. இந்த 4 கணிப்புகளும் நாம் தமிழர் கட்சி மோசமாக தோல்வி அடையும் என்று கணித்துள்ளன.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவாகவும் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வின்படி, திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

'INSIDE ELECTION' நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு
இதன் விளைவாக, வரும் தேர்தலில் 159 முதல் 165 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெறும் 33% வாக்குகளை மட்டுமே பெற்று, 64 முதல் 70 தொகுதிகளுக்குள் சுருங்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மண்டலங்களில்கூட அக்கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்ற கணிப்பு, அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18% வாக்குகளைத் தன்வசப்படுத்தும் தவெக, 4 முதல் 6 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தவெக ஈர்க்கும் இந்த 18% வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால்,
அது அதிமுகவுக்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளது. அதே சமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் தொகுதிகள் எதுவும் கிடைக்காது (0 இடங்கள்) என இந்தக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுகவின் ஆதிக்கம் தொடர்வதும், அதிமுகவின் வாக்கு வங்கி சரிவைச் சந்திப்பதும், தவெக ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதும் 2026 தேர்தல் களத்தின் முக்கிய மாற்றங்களாக இருக்கும் என இன்சைட் எலெக்சன் சர்வே சுட்டிக்காட்டுகிறது.
லோக் போல் கணிப்பு: நாம் தமிழர் தோல்வி
லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.
தனிப்போர்: இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஆட்சியில் பங்கு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அக்னி நியூஸ் சர்வீஸ்: நாம் தமிழர் தோல்வி
அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.
கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.
மண்டல வாரியான 'கிளீன் ஸ்வீப்': - சென்னை: 37-ல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!
மத்திய மண்டலம்: 37-ல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.
கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50-ல் 32 இடங்களையும், வடக்கில் 52-ல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது. இதிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
போல் டிராக்கர்: 'உச்சாணிக் கொம்பில்' உதயசூரியன்!
போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே 'பஞ்ச்' வைக்கின்றன.
வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7% வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று இதிலும் கூறப்பட்டு உள்ளது.
-
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங் -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை












Click it and Unblock the Notifications