பில்லி, சூனியம் வச்சு உமா உடம்பை ஊசியால குத்தணும்...வில்லி ஈஸ்வரியின் குரூர ஆசை
உமாவை கதற வைக்கணும்னா அவளுக்கு பில்லி சூனியம் வச்சு... உடம்பை ஊசியால குத்தணும் என்று கொடூரமாக யோசிக்கிறாள் பிரியமானவர் சீரியல் வில்லை ஈஸ்வரி.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவர் சீரியல் 700வது எபிசோடுகளை எட்டப்போகிறது. தொழிலதிபர்களாக இருந்த கிருஷ்ணன், உமா தம்பதியர், திடீரென்று தெருக்கோடிக்கு வந்து விட்டனர். நான்கு மகன்கள், மருமகள்களின் வாழ்க்கை ஆளுக்கு ஒரு பக்கம் சிதறிக்கிடக்கிறார்கள்.
கிருஷ்ணனின் நண்பர் அய்யாவு அவரது மகனாலேயே கொலை செய்யப்படுகிறார். அதற்குக் காரணம் தனது மகன்தான் என்று சாட்சி சொல்கிறார் கிருஷ்ணன். பழி கிருஷ்ணன் மகன் மேல் விழுகிறது.
அய்யாவு கொலை வழக்கில் சிக்கிய மூன்றாவது மகனை கொலை செய்ய துடிக்கும் போலீஸ் கிரி. அவனை காப்பாற்ற நினைக்கும் ஏசி என கதை சுற்றிச் சுற்றி வருகிறது. அய்யாவு மனைவி ஈஸ்வரி இப்போது சாதா ஈஸ்வரியல்ல பந்தா ஈஸ்வரியாக இருக்கிறாள்.

திமிர் ஈஸ்வரி
தெருக்கோடியில் இருந்த ஈஸ்வரி இப்போது கிருஷ்ணன் வீட்டை வாங்கி அதில் பந்தாவாக இருக்கிறாள். அதே தெருவில் அயர்ன் கடை போடும் உமா கிருஷ்ணன் தம்பதியை கடுப்பேற்றுவதற்காக அழுக்கு துணிகளை கொண்டு வந்து கொடுக்கிறாள் ஈஸ்வரி.

கிருஷ்ணனின் கோபம்
உமா, கிருஷ்ணன் குடும்பத்தினரை இந்த நிலைக்கு ஆளாக்கியதே ஈஸ்வரிதான் என்பது இப்போதுதான் உமா, கிருஷ்ணனுக்கு தெரியவந்திருக்கிறது.
ஈஸ்வரியை திட்டி அவள் துணியை தூக்கி வீசுகிறார் கிருஷ்ணன். ஆனால் உமாவோ, முதல்வாடிக்கையாளர் துணியை தவற விடக்கூடாது என்று வாங்கி வைக்கிறாள்.

போலீஸ் டிசி கிரி
போலீஸ் டிசி கிரி இப்போது ஈஸ்வரியின் வீட்டில்தான் இருக்கிறான். ஆனால் அவனை போலீஸ் ஊரெல்லாம் தேடி வருகிறது. ஆனால் அவனோ காரில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறான். கண்ணனுடன் காரில் சுற்றி வருகிறான்.

பில்லி சூனியம் வைக்கணும்
என்ன செய்தாலும் உமாவை அழ வைக்க முடியலையே என்று குமுறும் ஈஸ்வரி, அவளுக்கு பில்லி சூனியம் வைத்து உடம்பை ஊசியால் குத்தி அழ வைக்க வேண்டும் என்கிறாள். ஆனால் அதற்கு டிசி கிரியோ, உமாவின் மகனை கொலை செய்தாலும் அழ வைக்க முடியும் என்று ஐடியா கொடுக்கிறான்.

பெண்களா? பேய்களா?
விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியலில் பெண்களை அதீத வில்லத்தனம் செய்பவர்களாக காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஒரு சீரியலில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி கொலை செய்யச் சொல்கின்றனர். பிரியமானவள் சீரியலில் பெண்ணை கொல்ல பில்லி சூனியம் வைக்கச் சொல்வதா என்று ரசிகர்கள் குமுறுகின்றனர்.

பிரியமானவள்
பிரியமானவள் சீரியல் தற்போது இரவு 10 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. 700 எபிசோடுகளை தொடப்போகும் இந்த சீரியலின் கதை ஓட்டம் சற்றே ஜவ்வுதான். பழிவாங்கும் கதை. கொலை செய்து விட்டு சிறையில் இருந்து தப்பிய கிரியை பிடிக்க திறமில்லாத போலீஸ் என ஏகப்பட்ட சொதப்பல்கள் உள்ளன. கதையின் போக்கை மாற்றினால் மட்டுமே ரசிகர்களை கவரமுடியும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications