Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஜீவசமாதி அடைய அனுமதி கொடுங்கள்.. நளினி கணவர் முருகன் திடீர் கோரிக்கை

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் தான் ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று சிறை துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் மன உளைச்சலாக உள்ளது. எனவே ஜீவசமாதி அடைய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முருகன் சிறை துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். தங்களை விடுவிக்க மனு தாக்கல் செய்தும் பலனில்லை.

Rajiv Gandhi's assassination convict Murugan wants to jeeva samadhi

இந்நிலையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், 26 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

இதனால் வாழக்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டேன். கடந்த ஜூலை 18-ஆம் தேதியில் இருந்து உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டேன். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

அண்மையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முருகன், சாமியார் தோற்றத்தில் இருந்தார். இந்நிலையில் அவர், ஜீவசமாதி அடைய அனுமதி கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன்னை கருணை கொலை செய்துவிடும்படி அண்மையில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+