விசாரணைக்கு ஒத்துழைக்காத ராம்மோகன் ராவ் மகன் விவேக்.. மனைவிக்கு உடல் நலமில்லை என்று நாடகம்!
வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் ராம்மோகன் ராவின் மகன் விவேக் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் மகன் விவேக், தனது மனைவிக்கு உடல் நலமில்லை என்று கூறி வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மறுத்து வருகிறார். இது ஒரு நாடகம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது மகனின் வீடுகள் வருமானவரித் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரிக்க வருமானவரித் துறையினர் விவேக்கிற்கு சம்மன் அனுப்பினார்கள். முதல் நாள் விசாரணைக்குச் சென்ற விவேக் அடுத்தடுத்து செல்லாமல் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு வருவதாக நேற்று கூறிய விவேக் இன்றும் விசாரணைக்கு செல்லவில்லை. விவேக்குக்கும், அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாததால் வருமான வரித்துறையினர் முன் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையை தள்ளிப் போடுவதற்காக விவேக் நாடகமாடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத விவேக் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications