அண்ணா நினைவிடத்தில் 144 தடையை மீறி சசி, ஓபிஎஸ் அஞ்சலி - ஜெ., நினைவிடத்தில் மண்டியிட்டு வணங்கினார்!
மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை: அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சுற்றி வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மண்டியிட்டு குனிந்து விழுந்து கும்பிட்டார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
மெரீனா கடற்கரைக்கு கூட்டமாக செல்லவும், பேரணி செல்லவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக சென்று நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் அண்ணா சிலைக்கு எம்.பிக்கள் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 48வது நினைவுநாளை முன்னிட்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, எம்.பிக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு கழக மருத்துவ அணிச் செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டாக்டர். பி.வேணுகோபால் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இன்று பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications