சசிகலா பொதுச்செயலாளராவதை எதிர்த்து சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராவதை எதிர்த்து எம்பி சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி அதிமுகவில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் அழைப்புவிடுத்தனர்.
இதனையடுத்து, சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா போர்க் கொடி தூக்கியுள்ளார். மேலும், இதுதொடர்பான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் சட்ட விதிகள் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்காது என்றும் எனவே, சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக, அக்கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பு மற்றும் சசிகலா புஷ்பா தரப்பில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பை நீதிபதி கல்யாணசுந்தரம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications