ராம்குமாரை போலீசே கொன்று விட்டது: பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில் கருத்து
சென்னை: சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரை போலீசே திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக தனது பேஸ்புக்கில் பிரான்ஸ் தமிழச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வருபவர் பிரான்சில் வசித்து வரும் தமிழச்சி. இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பிரெஞ்ச் தமிழச்ச்சி தனது பேஸ்புக் பக்கத்தில், 'சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது' என்ற தலைப்பில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை.
நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையின ர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.
ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையின ர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications