நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை- வீரலட்சுமி வார்னிங்
கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாகக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி கெடு விதித்துள்ளார்.
அந்தக் கட்சியின் தலைவர் கி. வீரலட்சுமி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாக கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வருகிறது 28ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சத்யராஜ் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி கன்னட அமைப்புகள் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏப்ரல் 28ம் பாகுபலி 2 திரைப்படம் வெளியிடப்படும் என்று தெரிவித்தன. இதனையடுத்து நடிகர் சத்யராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜின் தமிழர் விரோத கருத்தை கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை போர்க் கொடி தூக்கியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications