For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. ஜாமீன் நீட்டிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி திடீர் மனு!!

By Madhivanan
Google Oneindia Tamil News

டெல்லி : சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை நீட்டிக்கக் கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் ஏப்ரல் 18-ந் தேதியுடன் முடிவடைகிறது.

supreme court

இதனிடையே சொத்து குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாம் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஜெயலலிதா தமது ஜாமீனை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கான ஜாமீனை நீட்டிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஒருமனுவத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Social activist Traffic ramaswamy had opposed TN former CM Jayalalithaa's plea seeking to extend her bail in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X