கொடைக்கானலில் கொலை வழக்கில் போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போதகரின் சர்ச்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் மற்றும் இவரது நண்பர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நகைக்காகவும் பணத்திற்காகவும் வீரலட்சுமியை கொலை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர்.

இந்நிலையில் கொலையாளி போதகரின் மகன் என்பதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பிரகாஷின் வீட்டையும் அவரது உறவினரின் வீட்டையும் அடித்து நொறுக்கியதோடு போதகரான அவரது தகப்பனார் நடத்தி வரும் தேவாலயத்தையும் அடித்து நொறுக்கினர். மேலும் ஒன்று கூடிய பொதுமக்கள் இந்த கொலைக்கு மது போதையே காரணம் என்பதால் அந்த கிராமத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் அதிமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அவர் இவர் சட்ட விரோதமாக நடத்தி வரும் மதுபானக் கடையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவாலயம் மற்றும் போதகரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் மலைக் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications