10 பேரை விடுவிக்கும் வரை சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டம்.. கதிராமங்கலத்தில் பெண்கள் தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யும் வரை அய்யனார் கோயில் அருகில் சமைத்து உண்டு பெண்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

4வது நாளாக போராட்டம்

4வது நாளாக போராட்டம்

அய்யானர் கோயில் அருகில் கடந்த 11ம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது. கோயில் அருகில் பெண்கள் கூடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கண்டு கொள்ளாத அரசுகள்

கண்டு கொள்ளாத அரசுகள்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

தொடரும் போராட்டம்

தொடரும் போராட்டம்

மேலும், ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என போராட்டம் நடத்திய பத்து பேர் மீது பொய் வழக்கை போலீசார் போட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று பெண்கள் கூறினர்.

போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று மாணவர்கள் கதிராமங்கலத்திற்கு வருவதாக தகவல் பரவியது. இதனால் அதிக அளவில் போலீசார் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Kathiramangalam women stage protest against ONGC, tension prevails.
Please Wait while comments are loading...