அரசியலில் சில தவறுகள் செய்துவிட்டேன்.. அன்புமணியின் செயல்பாடு அருவருப்பா இருக்கு.. விளாசிய ராமதாஸ்!
விழுப்புரம்: நான் அரசியலில் சில தவறுகளை செய்துள்ளதாகவும், அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் அன்புமணியை பாமக தலைவர் பொறுப்புக்கு கொண்டு வந்தது 2வது தவறு என்று கூறிய ராமதாஸ், அன்புமணியின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவியையும் கொடுத்துள்ளார். ராமதாஸ் மருத்துவமனையில் இருந்த போதும் கூட அன்புமணி சென்று பார்க்காதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

ஆனாலும் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. 2வது தவறு அன்புமணியை பாமக தலைவராக நியமனம் செய்டஹ்து.
தற்போது நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என்னை ஐயா என்று அழைத்த சிலர், அங்கு சென்று என்னைப் பற்றி திட்டி பேசுகிறார்கள். பாமக எம்எல்ஏ-க்களில் 2 பேர் என்னுடன் இருக்கிறார்கள். 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள். தற்போது அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை.
அவரின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அமைதியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கிற போது, அதில் பிளவு ஏற்பட்டதாக மக்கள் பேசுகிறார்கள். பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு அன்புமணி செயல்பட்டு வருகிறார். இதுவரை என் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறையோ, மோதலோ ஏற்பட்டதே இல்லை.
பாமகவை நான் பெரிதாக வளர்த்து வந்த நிலையில், நான் வளர்த்த பிள்ளைகளை அழைத்து அன்புமணியும், செளமியாவும் சில பொறுப்புகளை அளித்துள்ளனர். மேலும் என்னைப் பற்றியும், ஜிகே மணி பற்றியும் அவதூறு பரப்பி வருகின்றனர். என் கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும், அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம்.
அதேபோல் டிசம்பர் 30ல் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்தப் பொதுக்குழுவில் கூட்டணி மற்றும் மற்ற விஷயங்கள் குறித்து விவாதிப்போம். அப்போது என்ன கருத்து சொல்கிறார்களோ, அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இவர்களின் மோதல் பாமகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications