Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனிசுலாவை நாங்கள் ஆள மாட்டோம்! டிரம்ப் கருத்தை அப்படியே மறுத்த.. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவை நாங்கள் ஆளப்போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அப்படியெல்லாம் கிடையாது என்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

வெனிசுலா என்பது லத்தீன் அமெரிக்க நாடு. அதாவது புவியியல் ரீதியாக அமெரிக்காவுக்கு அடிப்பகுதியில் இந்த நாடு இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ரொம்பவும் பக்கமாக இருப்பதாலும், இங்கு கச்சா எண்ணெய் உட்பட இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதாலும், இந்த நாடுகளை தனது கண்ட்ரோலில் எடுக்க 1823லிருந்து அமெரிக்கா முயன்று வருகிறது.

Venezuela US America

வெனிசுலாவை ஆளும் அமெரிக்கா

இப்படி இருக்கையில்தான் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கடந்த 3ம் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது. ஆபரேஷன் 'அப்ஸொலியூட் ரெசொல்வ்' என்கிற பெயரில், வெனிசுலாவுக்குள் புகுந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைக்கு மொத்த உலகமும் கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்க.. டிரம்ப் சும்மா இல்லாமல், 'வெனிசுலாவை இனி அமெரிக்கா ஆளும்' என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஜகா வாங்கிய அமெரிக்கா

டிரம்பின் இந்த கருத்து, ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது. கண்டனங்கள் வலுக்க தொடங்கின. நாம என்ன ராஜாக்கள் காலத்திலா இருக்கிறோம்? போர் தொடுத்து நாட்டை கைப்பற்றுவதற்கு? என்ற கேள்விகள் எழுந்தன. இப்படி அமெரிக்காவுக்கு எதிராக மொத்த உலகமும் ஒன்று திரள, இந்த கருத்திலிருந்து தற்போது அமெரிக்கா ஜகா வாங்கியிருக்கிறது.

அழுத்தம் கொடுப்போம்

அதாவது டிரம்பின் கருத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மறுத்துள்ளார். "வெனிசுலாவை அமெரிக்கா நேரடியாக ஆட்சி செய்யாது. மாறாக எண்ணெய் முடக்கம் மூலம் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்தும். நேரடியாக ஆட்சி செய்ய மாட்டோம். ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்போம். இந்த அழுத்தம் மூலம் அந்நாட்டின் அரசியல் கொள்கைகள் அமெரிக்காவுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்கப்படும்.

எண்ணெய் வளம்

வெனிசுலா இனி போதைப்பொருட்களின் மையமாக இருக்க கூடாது என்பதும், எங்களின் எதிரிகளான ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பில் இருக்க கூடாது என்பதும் இலக்காக நிர்ணயித்திருக்கிறோம். வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முடக்கி, அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு தோதான கொள்கைகளை உருவாக்க கட்டாயப்படுத்துவோம்.

எங்களுக்கு வெனிசுலா எண்ணெய் தேவையில்லை. எங்களிடம் போதுமான எண்ணெய் இருக்கிறது. இருப்பினும் வெனிசுலாவின் எண்ணெய் வளம் எங்களின் எதிரிகளின் கைகளுக்கு செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று ரூபியோ கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை

மதுரோவை கைது செய்ததன் மூலம், ஈராக்கிலும், ஆப்கானிலும் போரை நடத்தியதை போல, இன்னொரு போருக்கு அமெரிக்கா தயாராகிறதோ? என்று சந்தேகம் எழுந்தது. ஆனால், ரூபியோ விளக்கம் மூலம் இந்த பதற்றம் சற்று குறைந்திருக்கிறது. தற்போதுவரை வெனிசுலாவில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்படவில்லை என்றும், நாங்கள் மேற்கொண்டது போரோ, தாக்குதலோ கிடையாது.. இது சட்ட அமலாக்க நடவடிக்கை என்றும் அமெரிக்கா விளக்கமளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+