வெளியானது Parasakthi Uncensored Version.. ஓடிடி தளத்தில் இந்த வெர்ஷனை பார்ப்பது எப்படி?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தித் திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த பராசக்தி படத்திற்குத் தியேட்டர்களைப் போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தின் அன்சென்சார்ட் வெர்ஷன் இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியானது.

ஓடிடியில் பராசக்தி
ஜனநாயகனை போலவே இந்தப் படத்திற்கும் சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்குமா என்பதில் பெரும் குழப்பமே நிலவியது. பட ரிலீஸுக்கு 2 நாள் வரையிலும் கூட சென்சார் சான்று கிடைக்காமலேயே இருந்தது. ரிலீஸுக்கு முந்தைய நாளே படத்திற்கு சென்சார் சான்று கிடைத்தது. அதைத் தொடர்ந்தே பொங்கலுக்கு வெளியானது.
இந்தப் படத்திற்குத் தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை பராசக்தி படம் வசூலித்ததாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடியிலும் வெளியானது. ஜீ5 ஓடிடி தளத்தில் பராசக்தி படம் வெளியானது. ஓடிடியிலும் கூட பராசக்தி படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. வெளியான இரண்டே நாட்களில் சுமார் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகி சாதனை படைத்துள்ளது. ஓடிடியிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மியூட் செய்யப்பட்ட காட்சிகள்
முன்பே குறிப்பிட்டது போல பராசக்தி படத்திற்கு சென்சாரில் சிக்கல் இருந்தது. படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இருந்தது. மேலும், ஒரு சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. குறிப்பாக இந்தி தொடர்பான வசனங்கள் மாற்றப்பட்டது. தீ பரவட்டும் என்பது நீதி பரவட்டும் என மாற்றப்பட்ட. அண்ணா குறித்த காட்சியும் நீக்கப்பட்டது. அதேபோல இந்தி தொடர்பான பல வசனங்கள் மியூட் செய்யப்பட்டது. இதனால் அப்போதே ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர்.
பராசக்தி அன்சென்சார்ட் வெர்ஷன்
ஓடிடியிலும் அதே வெர்ஷன் தான் வெளியாகி இருந்தது. இதற்கிடையே Uncensored வெர்ஷனை வெளியிட வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்தக் கோரிக்கை வந்த நிலையில், ஜீ5 நிறுவனம் Uncensored வெர்ஷன் வெளியிடப்படும் என அறிவித்தது. அதன்படி இன்றைய தினம் படத்தின் Uncensored வெர்ஷன் வெளியாகியுள்ளது.
இதில் தியேட்டர் வெர்ஷனில் மியூட் செய்யப்பட்ட பெரும்பாலான வசனங்கள் அன்மியூட் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல படத்தின் கிளைமேக்ஸில் "அண்ணா தான் இந்த நாட்டை ஆள்வதாகவே பொருள்" என்ற வசனம் இருக்கும் காட்சி தியேட்டரில் நீக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சி இந்த புதிய வெர்ஷனில் இருக்கிறது. அதேநேரம் "தீ பரவட்டும்" என்பது நீதி பரவட்டும் என்று சென்சாருக்கு பிறகு மாற்றப்பட்ட நிலையில், இந்த அன்சென்சார்டு வெர்சனிலும் "நீதி பரவட்டும்" என்றே இருக்கிறது. இதுபோல சில காட்சிகள் அன்சென்சார்டு வெர்ஷனிலும் அப்படியே இருக்கிறது.
அன்சென்சார்டு வெர்ஷன் பார்ப்பது எப்படி?
இப்போது ஜீ5 தளத்தில் இந்த இரு வெர்ஷன்களுமே இருக்கிறது. அன்சென்சார்ட் வெர்ஷனை பார்க்க வேண்டும் என்றால் ஜீ5 தளத்தில் சென்று Parasakthi Uncensored Version என்று தேட வேண்டும். அப்படித் தேடினால் இந்த வெர்ஷன் கிடைக்கிறது. மேலும், அதன் முகப்பு படத்திலும் Parasakthi Uncensored Version என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய வெர்ஷனில் இந்த Uncensored Version என்ற வாசகம் இல்லை. எனவே, அதை வைத்து நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications