Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: கிரிஷ் இந்த வீட்டு பையன்! உண்மையை சொன்ன மீனா! முத்து கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 3ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வாங்கிய கடனுக்காக அண்ணாமலை முக்கிய விஷயம் ஒன்றை செய்திருக்கிறார். அதேபோல க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை புதிய சந்தேகம் வருகிறது. அது பற்றி மீனா என்ன சொன்னார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த சீரியலில் அண்ணாமலை வீட்டை விட்டு காணாமல் போயிருந்தார். எல்லோரும் அவரை தேடிக் கொண்டிருக்கும் போது நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார். அப்போது மனோஜ்க்கு கடன் கொடுத்த பைனான்ஸியரும் வீட்டிற்குள் வந்திருந்தார். இதனால் அவர்தான் அண்ணாமலையை கடத்தி வைத்திருந்தாரா என்று முத்துவுக்கு சந்தேகமும் வந்திருந்தது.

Siragadikka Aasai serial Vijay TV

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை எங்கே போனேன் என்று உண்மையை சொல்கிறார். அதாவது தான் தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து மூன்று லட்சம் ரூபாயுடன் பைனான்சியரை சந்தித்து பணத்தை கொடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுக்க அனுமதிக்கும்படி கேட்டு இருந்தார். இதைப் பற்றியே அண்ணாமலை குடும்பத்தினர் சொல்கிறார்.

அப்போது அந்த பைனான்சியர் என் வாழ்க்கையில் இவரை போன்ற ஒரு அப்பாவை நாம் பார்த்ததில்லை என்று பெருமையாக பேசுகிறார். அதோடு அண்ணாமலையை மிரட்டி கையெழுத்து வாங்கிய பத்திரத்தை கிழித்து போடுகிறார். பிறகு மனோஜ் தன்னிடம் வாங்கிய கடனுக்கு மாதம் ஒரு லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று அவரிடம் கையெழுத்து கேட்க, முதலில் மனோஜ், ரோகிணி இருவரும் யோசிக்கின்றனர்.

அப்போது விஜயா திட்டியதும் இருவரும் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். அடுத்ததாக மனோஜ் ஷோரூம்க்கு வந்து அடுத்து என்ன பிசினஸ் செய்யலாம்? எப்படி இந்த ஒரு லட்சம் கடனை கட்டுறது என்று யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுக்க கடைசியில் இருக்கிற பிசினஸையே நல்ல கவனிச்சு டெவலப் பண்ணலாம் என்று முடிவு எடுக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மறுபக்கத்தில் கிரிஷ் ஸ்கூலில் இருந்து ஒரு லெட்டரை வாங்கிட்டு வந்து முத்துவிடம் நீட்ட, அது இங்கிலீஷில் இருப்பதால் தனக்கு படிக்க தெரியாதே என்று தன்னுடைய அப்பாவிடம் அதை கொடுக்க அவர் அதை படித்து பார்த்துவிட்டு கிரிஷ் ஸ்கூலில் டூர் போவதற்காக 2500 ரூபாய் கொடுக்க சொல்லி லெட்டர் கொடுத்திருக்காங்க என்று சொன்னதும் விஜயா வழக்கம் போல க்ரிஷை திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்துவும் ஸ்ருதியும் பேசி மூன்று ஃபேமிலியும் ஆளுக்கு கொஞ்சம் ஷேர் போட்டு பணம் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்க, அதற்கு மனோஜ் முடியாது என்று சொல்கிறார். விஜயா இந்த பையனுக்கு எல்லாம் எதுக்காக பணம் செலவழிக்கணும் என்று கேட்க, அதற்கு மீனா க்ரிஷ் இந்த வீட்டு பையன் தான் என்று உளறிவிடுகிறார். கடைசியில் முத்து நானே மொத்த பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அடுத்ததாக முத்துவிடம் அண்ணாமலை பேசும்போது எனக்கு விஜயா சொன்னதை வைத்து கிரிஷ் விஷயத்தை இன்னும் சந்தேகம் வருகிறது. நாம எத்தனை நாளைக்கு இந்த பையனை நம்ம வீட்டுல வச்சிருக்க முடியும்? அந்த பையனை பற்றி எதுவுமே தெரியாது. நாளைக்கு அவன் பெரியதாகி வந்த பிறகு நம்மிடம் கேள்வி கேட்பான் என்று சொன்னதும் முத்துவுக்கும் சந்தேகம் வருகிறது. அது பற்றி முத்து பேசும் போது கிரிஷ்க்கு அவங்க அம்மா இறந்த சோகம் கொஞ்சம் கூட இல்லை. அவங்க பாட்டு இல்லாம நம்மகிட்ட எதையோ மறைக்கிறாங்கன்னு தோணுது என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+