27 வயது பெங்களூர் பெண்.. 50 லட்சம் சம்பளம் வாங்கியும் இப்படியா..? பாராட்டியே ஆகணும்!
இன்றைய காலத்தில் அதிகப்படியான சம்பளம் பெறுபவர்கள் ஆடம்பரமான கார்கள், ஐபோன்கள், விலையுயர்ந்த பேக்குகள் ஆகியவற்றை வாங்கி தங்களுடைய செல்வத்தை காட்டுவது வழக்கமாக இருக்கும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் அதற்கு நேர்மாறான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறார்.
வருடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் பெறும் இவர், பணத்தை ஆடம்பரப் பொருட்களில் செலவழிப்பதற்கு பதிலாக அனுபவங்களுக்காக முதலீடு செய்கிறார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இவரது பதிவு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூரில் டேட்டா இன்ஜினியராக பணியாற்றும் இந்த இளம் பெண், @thinking.mori என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் தனது அன்றாட வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். தனது அதிகப்படியான சம்பளம் குறித்து பகிர்ந்த அவர், "அத்தனை பணமும் இருந்தாலும் கடன்களும் உள்ளன. இதனால் ஆடம்பர பொருட்களுக்கு பதிலாக அனுபவங்களைத் தேர்வு செய்கிறேன் " என்று எழுதியுள்ளார்.
வாங்க மறுக்கும் பொருட்கள்
இவர் தனது பணத்தை செலவழிக்க விரும்பாத பொருட்களின் பட்டியலை தனது இன்ஸ்டா வீடியோவில் வெளியிட்டுள்ளார். அவற்றில் முக்கியமானவை:
புதிய ஐபோன் மாடல்கள்
லக்ஷரி கார்கள்
ஜாரா போன்ற ஃபாஸ்ட் ஃபேஷன் உடைகள்
விலையுயர்ந்த ஹேண்ட்பேக்குகள்
டிசைனர் உடைகள் மற்றும் ஷூக்கள்
இவை பெரும்பாலான அதிக சம்பளம் பெறுபவர்களால் "வெற்றியின் அடையாளமாக" கருதப்படும் பொருட்கள். ஆனால் இதையெல்லாம் திங்கிங் மோரி வாங்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளது, இளைஞர்கள் மத்தியில் மினிமலிசம் புதிய டிரெண்டாக மாறியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பணத்தை செலவழிக்கும் இடங்கள்
இவர் தனது பணத்தை முக்கியமாக மூன்று விஷயங்களில் செலவழிக்கிறார் - பயணம், உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும், இதுவே தனது உண்மையான மகிழ்ச்சி என்றும் கமெண்ட் வாயிலாக பதில் அளித்துள்ளார். "Experiences >> Objects" (அனுபவங்கள் > பொருட்கள்) என்ற அவரது வார்த்தைகள் பலரின் மனதில் எதிரொலித்துள்ளன.
இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். பலரும் தானும் இதேபோன்று தான் தற்போது வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த இளம் பெண்ணின் அணுகுமுறை, இன்றைய இளம் தலைமுறையினரிடையே வளர்ந்து வரும் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications