ஹைதராபாத்-ஐ காலி செய்ய வரும் விசாகப்பட்டினம்.. சந்திரபாபு நாயுடு மெகா திட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் அடுத்த பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மையமாக உருவாகி வருகிறது. விசாகப்பட்டினம் நகரம் இப்போது டேட்டா சென்டர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் ஹப் ஆக மாறி வருகிறது.

தெலுங்கானா - ஆந்திரா பிரிக்கப்பட்டபோது, ஹைதராபாத் தான் முக்கிய பேசுப்பொருளாக இருந்து வந்தது. காரணம் இணைக்கப்பட்ட ஆந்திராவில் பெரும் பகுதி வர்த்தகம், வருவாய் என அனைத்தும் ஹைதராபாத்-ஐ மட்டுமே சார்ந்து இருந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத்தின் நீண்டகால ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர பிரதேச அரசு பல பெரிய திட்டங்கள் இங்கு வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விசாகப்பட்டினம் இந்தியாவின் டேட்டா சென்டர் ஹப் ஆக மாற உள்ளது.

IT AI hyderabad Visakhapatnam Chandrababu Naidu Andhra pradesh Reliance Visakhapatnam Data Centre Mukesh Ambani AI Investment Andhra Data Centre Boom Visakhapatnam vs Hyderabad India Largest Data Centre vs Reliance 1 6 lakh crore data centre Visakhapatnam data centre cluster Mukesh Ambani AI investment 1 5 GW data centre Andhra Reliance vs Google data centre Andhra Pradesh data centre policy Visakhapatnam digital hub 6 GW data centre target Andhra Bhogapuram data centre project Reliance solar battery storage Nara Lokesh data centre India data centre boom 2026 Visakhapatnam challenging Hyderabad Reliance 500 MW first phase Andhra Pradesh digital infrastructure 1 6 AI 1 5 6 vs 500

ரிலையன்ஸின் வரலாறு காணாத முதலீடு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ், விசாகப்பட்டினத்தில் ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான 1.5 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரை கிளஸ்டரை நிறுவ உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய டேட்டா சென்டர் திட்டமாக இது அமையும். முதல் கட்டமாக 500 மெகாவாட் திறன் கொண்ட மையம் 2028 அக்டோபரில் இயங்கத் தொடங்கும். 2030-க்குள் மொத்த திறன் 1.5 ஜிகாவாட்டை எட்டும்.

கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள்

ரிலையன்ஸ் மட்டுமல்ல, உலகளாவிய பெரும் நிறுவனங்களும் விசாகப்பட்டினத்தை நோக்கி டேட்டா சென்டர் அமைப்பதற்காக மட்டுமே வருகின்றன. கூகுள் நிறுவனம் சுமார் 15 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் 1 ஜிகாவாட் டேட்டா சென்டர் கிளஸ்டரை அமைக்க உள்ளது.

இதை தொடர்ந்து Sify Technologies 500 மெகாவாட், Digital Connexion 1 ஜிகாவாட், Anant Raj Cloud 300 மெகாவாட், ஆர்எம்சி கார்ப் 1 ஜிகாவாட், டில்மேன் குளோபல் ஹோல்டிங்க்ஸ் 300 மெகாவாட் என பல நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய தயாராகி வருகின்றன.

ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் அதானி கெனெக்ஸ் 70000 கோடி முதலீட்டில் 5 ஜிகாவாட் டேட்டா சென்டர் அமைக்க 2019ல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து ஏர்டெல்-ன் NXTRA 87250 கோடி ரூபாய் மதிப்பில் ஏஐ டேட்டா சென்டர்களுக்கான அதிவேக பைபர் நெட்வொர்க் மற்றும் submarine cables இணைப்பை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

IT AI hyderabad Visakhapatnam Chandrababu Naidu Andhra pradesh Reliance Visakhapatnam Data Centre Mukesh Ambani AI Investment Andhra Data Centre Boom Visakhapatnam vs Hyderabad India Largest Data Centre vs Reliance 1 6 lakh crore data centre Visakhapatnam data centre cluster Mukesh Ambani AI investment 1 5 GW data centre Andhra Reliance vs Google data centre Andhra Pradesh data centre policy Visakhapatnam digital hub 6 GW data centre target Andhra Bhogapuram data centre project Reliance solar battery storage Nara Lokesh data centre India data centre boom 2026 Visakhapatnam challenging Hyderabad Reliance 500 MW first phase Andhra Pradesh digital infrastructure 1 6 AI 1 5 6 vs 500

ஆந்திர அரசின் உதவிகள்

ஆந்திரப் பிரதேச அரசு குறைந்த காலக்கட்டத்தில் ஏஐ டேட்டா சென்டர் வர்த்தகத்தில் இவ்வளவு பெரிய ஒப்பந்தங்களை பெறும் அளவுக்கு வளர்ச்சி அடைய முழு பலத்தை அளித்து வருவது அம்மாநிலத்தின் டேட்டா சென்டர் கொள்கை 4.0 தான். இக்கொள்கை மூலம் பல ஊக்குவிப்புகளை ஆந்திர அரசு முதலீடு செய்ய வரும் டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

இக்கொள்கையின் கீழ் ஆந்திராவில் டேட்டா சென்டர் அமைக்கும் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி முழுமையாக திருப்பித் தரப்படும், இயந்திரங்களுக்கு 10 சதவீத மானியம், நேரடி மின்சக்தி கொள்முதல் அனுமதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. "வேகமான வியாபாரம்" திட்டத்தின் கீழ் ஒற்றை சாளரம் அனுமதி மற்றும் நில ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

6 ஜிகாவாட் இலக்கு

ஆந்திர பிரதேச அரசு 6 ஜிகாவாட் டேட்டா சென்டர் திறனை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே 5.6 ஜிகாவாட் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரிலையன்ஸ் திட்டம் முழுமையானால் இந்த இலக்கு எளிதில் எட்டப்படும்.

IT AI hyderabad Visakhapatnam Chandrababu Naidu Andhra pradesh Reliance Visakhapatnam Data Centre Mukesh Ambani AI Investment Andhra Data Centre Boom Visakhapatnam vs Hyderabad India Largest Data Centre vs Reliance 1 6 lakh crore data centre Visakhapatnam data centre cluster Mukesh Ambani AI investment 1 5 GW data centre Andhra Reliance vs Google data centre Andhra Pradesh data centre policy Visakhapatnam digital hub 6 GW data centre target Andhra Bhogapuram data centre project Reliance solar battery storage Nara Lokesh data centre India data centre boom 2026 Visakhapatnam challenging Hyderabad Reliance 500 MW first phase Andhra Pradesh digital infrastructure 1 6 AI 1 5 6 vs 500

விசாகப்பட்டினத்தின் வலிமை என்ன?

விசாகப்பட்டினம் பல இயற்கையான வசதிகளைக் கொண்டுள்ளது. போகபுரம் விமான நிலையம் வரவிருக்கும் காரணத்தால் இப்பகுதியை சுற்றி தான் அனைத்து டேட்டா சென்டர்களும் அமைய உள்ளது. ஒருபக்கம் போகபுரம் விமான நிலையம் மறுபுறம் விசாகப்பட்டினம் விமான நிலையம் ஆகியவை வைசாக் மற்றும் அனக்காப்பள்ளி மாவட்டங்களின் அமையும் டேட்டா சென்டர்களை ஒற்றை கோட்டில் இணைக்கிறது.

இதை தொடர்ந்து விசாகப்பட்டினம் கடல் அருகே இருப்பதால் அண்டர்சீ கேபிள் இணைப்புகளுக்கு ஏற்ற இடம். சூரிய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதிகளும் அதிகம். இவை அனைத்தும் டேட்டா மையங்களுக்கு மிக முக்கியமானவை.

ஹைதராபாத்துக்கு சவால்

பல ஆண்டுகளாக ஹைதராபாத் இந்திய ஐடி சேவை துறையில் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. ஆனால் விசாகப்பட்டினம் இப்போது அதற்கு வலுவான போட்டியை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவிலான நிலம், கொள்கை ஆதரவு, பல நிறுவனங்களின் குவிப்பு ஆகியவை விசாகப்பட்டினத்தை வலுவான டிஜிட்டல் ஹப்பாக மாற்றுகின்றன.

இந்த மாற்றம் வெறும் டேட்டா மையங்கள் கட்டுவதோடு மட்டும் நிற்கவில்லை. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகள், ஸ்ட்ரீமிங், நிதித்துறை உள்ளிட்ட பல துறைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கிறது. ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வரைபடத்தை மாறும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+