திமுக, அதிமுக, பாஜகவின் கனவில் மண்.. ஸ்டாலின் கோபப்பட்டு விஜய்க்கு நெருக்கடி தர காரணம் இதுதான்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக அதிமுக, திமுக இரண்டும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தவெகவும் பெரும்பான்மை இல்லாதநிலை ஏற்பட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் ஒரு இடத்தில் சுருங்கிவிட்டது. இந்த சூழலில் அதிமுக பக்கமே விஜய் போவார் என்று திமுக எதிர்பார்த்தது. அதிமுக பாஜகவின் ஆள் என்று நிரூபிக்க ஸ்டாலின் திட்டமிட்டார். ஏனெனில் வேறு வாய்ப்பு விஜய்க்கு இல்லை என்பதே உண்மையாக இருந்தது. ஆனால் ஸ்டாலினின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டது காங்கிரஸ். இது பாஜக, அதிமுகவுமே சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.மகாராஷ்டிரா, பீகார் பாணியில் காங்கிரஸ் செய்த வேலையால் பாஜக, திமுக, அதிமுக கடும் கோபத்திற்கு ஆளாகின. இதுதான் விஜய்யின் நெருக்கடிக்கு காரணம் ஆகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் வெளியாகின. இதில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் . தி.மு.க. தலைமையிலான கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

.
இதில் இயல்பாகவே அதிமுக பாஜக பக்கமே விஜய் போக வாய்ப்பு அதிகமாக இருந்தது . இதனைத்தான் திமுக தலைவர் ஸ்டாலினும் விரும்பினார். மதசார்பற்ற சக்திகள் நாங்கள் தான். அவர் பாஜகவின் ஆள் என்று கூறிவந்த திமுகவிற்கு அதனை நிரூபித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து, வலுவாக தோல் உரிக்கவே திட்டமிட்டது. ஆனால் திமுக உடன் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஜெயித்த மறுநாளே, திமுக பாஷையில் சொல்வது என்றால், வெற்றி பெற்றதற்கு சான்றிதழ் மை காய்வதற்குள் தவெகவிற்கு ஆதரவு தந்தது. இதனை சுத்தமாக பாஜக, அதிமுக, திமுக எதிர்பார்க்கவில்லை.. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக, பாஜகவின் கனவில் மண்ணை போட்டது காங்கிரஸ்.
மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகாவில் ஏற்கனவே பாஜகவிற்கு இப்படித்தான் காங்கிரஸ் அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைமத்துள்ளது. குறிப்பாக இப்போது எப்படி விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்ததோ, அதேபோல் பாஜக இருந்தது. அப்போது பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவை தன்பக்கம் இழுத்து, நீங்கள் முதல்வராகுங்கள் என்று கூறி தூண்டி ஆட்டையை கலைத்தது காங்கிரஸ். இதனால் முதல்வராக முடியாமல்போனதால் கோபத்தின் உச்சியில் இருந்த பாஜக தலைமை, பின்னர் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிளுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்று தந்தது. மூன்று கட்சிகளையும் உடைத்து, பாஜக ஆட்சியை உருவாக்கியது. குறிப்பாக சிவசேனாவை காலி செய்தது. அது தனிக்கதை..
இப்போது அப்படித்தான் தமிழ்நாட்டிலும் தவெகவை பயன்படுத்தி முன்னேற பார்த்ததை பாஜக, அதிமுக, திமுக மூன்றுமே ரசிக்குமா.. அதுதான் தவெக ஆட்சியமைக்க முடியாமல் இவ்வளவு சிக்கலை சந்திக்க காரணம். நேற்று வரை கூட்டணியில் இருந்து, சட்டென கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மாறியதை பச்சை துரோகமாகவே திமுக பார்க்கிறது. அதுமட்டுமல்ல, பாஜகவின் ஆள் விஜய் என்று கட்டமைக்க முயன்ற திமுகவின் திட்டங்களை எல்லாமே காங்கிரஸின் அவசரமான முடிவால் காலியாகி போனது. அதுமட்டுமல்ல, இப்போது கம்யூனிஸ்டுகளுமே அங்கே போனது, திமுகவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவே தற்போதைய விஜய்யின் நெருக்கடிக்கு காரணம் ஆகும்.














Click it and Unblock the Notifications