பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆபத்து? காங்கிரஸில் இணையும் 30 எம்எல்ஏக்கள்? பரபர தகவல்
சண்டிகர்: டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியைச் சந்தித்த நிலையில், பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 30 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் அணி மாறவும் கூட ரெடியாக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வென்றது. அங்கு சுமார் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த சூழலில், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.

கெஜ்ரிவால், சிசோடியா எனப் பல முக்கிய தலைவர்களும் கூட தங்கள் தொகுதிகளில் தோல்வி அடைந்தனர். இதற்கிடையே பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உட்கட்சி பூசல்:
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் உட்கட்சி பூசல் காரணமாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா தெரிவித்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பினருடன் சுமார் ஒரு வருடமாகத் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் கட்சி மாறவும் கூட ரெடியாக இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் பர்தாப் சிங் பஜ்வா.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பஞ்சாபில் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் இருக்கிறது. இங்கு முதல்வராக உள்ள பகவந்த் மானை மாற்ற டெல்லி ஆம் ஆத்மி தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மாநிலத்தில் உள்ள பல ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள்.
30 எம்எல்ஏக்கள்:
மேலும், லூதியானா (மேற்கு) சட்டசபை தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் அரசியலில் கெஜ்ரிவால் குதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அங்குள்ள சுமார் 30 எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கட்சி மாறவும் தயாராக இருக்கிறார்கள்" என்றார்.
பஞ்சாபில் மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், அதில் 93 பேர் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள். அங்குப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தது 59 இடங்கள் தேவை. தற்போது ஆம் ஆத்மிக்கு 93 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அதில் 30 பேர் கட்சி மாறினாலும் 63 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஒருவேளை அப்படி நடந்தாலும் ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல் வராது என்ற போதிலும், அது ஆம் ஆத்மிக்கு மிக பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆம் ஆத்மி அழிவுக்கு காரணமாக அமையும்:
இது தொடர்பாகப் பஞ்சாப் அரசியல் விமர்சகர் குல்தீப் சிங் கூறுகையில், "பஞ்சாபில் அடுத்து 2027ல் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆம் ஆத்மி வலிமையாக இருந்தால் அது எதிர்க்கட்சிகளுக்குச் சிக்கல். இதன் காரணமாகவே ஆம் ஆத்மி கட்சியை பிளவுபடுத்த இங்குள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் விரும்புகின்றன.
மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் லூதியானாவில் போட்டியிட முடிவு செய்தால், அது ஆம் ஆத்மி அழிவுக்கே காரணமாக இருக்கும். தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியை வளர்த்தெடுக்க கெஜ்ரிவால் முயலும் நிலையில், அவர் பஞ்சாபில் போட்டியிட்டால் அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடிக்கும்" என்றார்.
டெல்லி காங்கிரஸ் விளக்கம்:
அதேநேரம் காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுகளைப் பஞ்சாப் ஆம் ஆத்மி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் நீல் கார்க் கூறுகையில், "கெஜ்ரிவால் எங்கள் தேசிய தலைவர்.. பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர். இதில் எந்தவொரு குழப்பமும் இல்லை.. காங்கிரஸ் வேகமாக அழிந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆதாரமே இல்லாமல் அவர்கள் ஏதேதோ சொல்லி வருகிறார்கள்.
டெல்லியில் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. 2022 தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அது 2027 தேர்தலில் மேலும் குறையும். சமீபத்தில் நடந்த நகராட்சித் தேர்தலை கூட பாருங்கள்.. காங்கிரஸ் அழிவின் பாதைக்குச் செல்வது புரியும்" என்றார்.
-
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ











Click it and Unblock the Notifications