தொட்டால் செத்துடுவோம்.. புதிய உயிரினத்தால் வரும் பேராபத்து! விஞ்ஞானிகள் சொன்ன ஷாக் தகவல்!
டோக்கியோ: மனிதர்களுக்கு ஏராளமான உயிர்களால் ஆபத்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்த உயிரினங்களின் லிஸ்ட்டில் தற்போது புதியதாக ஒன்று சேர்ந்திருக்கிறது.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு புதிய வகை கடல் உயிரினத்தைப் பற்றிதான் இப்போதும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆராய்ச்சியாளர் யோஷிகி ஓச்சியாய் என்பவர், ஜப்பானின் காமோ கடற்கரையில் பழைய காதலியை நினைத்துக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தபோது, நீல நிறத்தில் ஜெல்லி மீன் போன்ற ஒரு விசித்திரமான உயிரினத்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். இந்த ஏரியாவில் இதுக்கு முன்னாடி இப்படி விசித்திரமான உயிரினத்தை யாரும் பார்த்தது கூட கிடையாது.
என்னடா இது.. தலையும் புரியல வாலும் புரியல என்று குழம்பிய யோஷிகி, டக்குனு கட்டை பையில் தூக்கி போட்டு ஆய்வகத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். அதை டோஹோகு பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று பரிசோதித்தபோதுதான், அது ஒரு புதிய வகை இனம் என்பது தெரியவந்தது.
பார்க்க ஜெல்லி மீன் போலவே இருந்தாலும், உண்மையில் இது ஒரு 'சைபனோபோர்' ஆகும். 'சைபனோபோர்' எனில், இது ஒரு தனி உயிரினம் அல்ல. சூயாய்ட்ஸ் எனப்படும் பல சிறு உயிரினங்களின் தொகுப்பை தான் இப்படி சொல்வார்கள்.
இதில், ஒவ்வொரு பகுதியும் ஒரு வேலையைச் செய்யும் ஒன்று மிதக்க உதவும், ஒன்று உணவைப் பிடிக்க உதவும், மற்றொன்று செரிமானத்திற்கு உதவும்.
இந்த புதிய இனத்திற்கு ஜப்பானிய நிலப்பிரபுவான டேட் மசாமுனேயின் ஹெல்மெட்டில் உள்ள பிறை நிலவு அடையாளத்தைக் குறிக்கும் வகையில் 'மிகாசுகி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மிதவை அமைப்பு வித்தியாசமானது. மேலும், இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட முதன்மை உணர்நீட்சிகள் உள்ளன. இதன் செரிமானப் பகுதி மஞ்சள் நிறத்தில், வாழைப்பழம் போன்ற வடிவில் இருக்கும்.
பொதுவாக வெப்பமண்டலக் கடல்களில் காணப்படும் இந்த உயிரினம், வரலாற்றில் முதன்முறையாக ஜப்பானின் குளிர்ந்த வடக்குப் பகுதியான டோஹோகு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
கடல் நீர் வெப்பமடைவது (இதுக்கு நம்மதான் காரணம்) மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த உயிரினங்கள் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
இந்த உயிரினத்தின் கொடுக்கில் இருக்கும் நச்சு மிகவும் வலிமிகுந்தது, தொட்டால் உயிரே போய்விடும். கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
சிங்கம், புலி தொடங்கி.. கொரோனா, மலேரியா, டெங்கு வைரஸ் வரை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த புதிய வகை உயிரினமும் அச்சுறுத்தலாக இருப்பது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications