For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹலோ, இலக்-கி-யம் !

By Staff
Google Oneindia Tamil News

வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சோகமோ, சுகமோ ஒரே மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகாகவி என்ற பெயர் பாரதியாருக்குக் கிடைக்கக் காரணமே, அவருக்குள் ஒளிந்திருந்த இன்னொரு மனிதன்தான். பாரதிக்குள் இருந்த அந்-த மற்றொரு மனிதன் நல்ல கலா ரசிகன்.

எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் பாரதி இந்தப் பாடலில் -காற்-றில் ஆ-டும் கயிற்றுக்கு உயிர் தருகிறார். அதற்கு காதலையும் கொடுக்கிறார்.

இரு சாதாரண கயிறுகள். காற்றில் ஆடுகின்றன. அதைப் பார்க்கிறார் பாரதி. அவருக்குள் கற்பனை -பீ-றி-டு-கி-ற-து. பிறக்கிறது பாடல்...

கவிதை: காற்று

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல்.

தென்னோலை.

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளை சாதாரணக்

கயிற்றால் கட்டி, மேலே தென்னங் கிடுகுகளை விரித்திருக்கிறது.

ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது.

ஒரு சாண் கயிறு.

இந்தக் கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பார்த்தால் துளி கூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையாமல் உம்மென்றிருக்கும்.

கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. குஷால் வழியிலிருந்தது.

............................................................................

அந்தத் தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர்.

பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை.

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்).

கயிறுகளுக்குப் பெயர் வைத்துச் சந்தோஷப்பட்ட முதல் நபர் பாரதியாகத்தான் இருக்க முடியும். அது பாட்டுக்குக் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது. காற்றில் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுள்ளது. முண்டாசுக் கவிஞனுக்கு அது வித்தியாசமாகத் தோன்றியுள்ளது. கயிற்றை மனிதனாகப் பார்க்கிறான்.

தொடர்கிறான் பாரதி...

கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது.

வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது.

அந்தச் சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

போனதோடு இல்லாமல் பேசவும் செய்கிறான். எப்படி...?

என்ன கந்தா செளக்கியம்தானா?. ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்து விட்டேனா?

என்னவோ? போய் மற்றொரு முறை வரலாமா? என்று கேட்டேன்.

எப்படிக் குறும்பு..? கிண்டல் தொனிக்கக் கயிற்றை நையாண்டி செய்கிறான் பாரதி. ஆனால் கயிறு, பாரதிக்கே அல்வா கொடுக்கிறது.

அதற்குக் கந்தன்; - அட போடா, வைதீக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா?

என்னடி, வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததில் உனக்குக் கோபமா? என்றது.

சரி, சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம் என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து நான்

பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.

............................................................................

சில கணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்,

மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல்.

இப்படியாக நடந்து கொண்டு வந்தது.

............................................................................

நின்று மென்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே

நான் நிற்பதை மறந்து, நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள், ஒரு வரிக்கு ஒரு வர்ண மெட்டு.

இரண்டே சங்கதி. பின்பு மற்றொரு பாட்டு.

............................................................................

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

நான் திரும்பி வந்துப் பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது.

கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

இப்படிச் செல்கிறது கவிதை...

இது ஒரு வசன கவிதை. சாதாரண காற்றும், அதில் அசைந்து ஆடிய கயிறும்தான் கதாபாத்திரங்கள். காற்றில், கயிறு அசைவதைக் கூட கவி-தை-யாக்-கி-ய அவன் மகா கவி-ஞன் தா-னே.

காதலர்களின் சிணுங்கல்கள், ஊடல்கள், கோபம், தாபம், உணர்வுகளை தத்ரூபமாக இந்தக் கயிறுகளின் மீது புகுத்தியுள்ளான் பாரதி. வள்ளி, முருகன் என்று பெயரும் சூட்டுகிறான். அவர்களின்ஊடலைப் பார்த்து மகிழ்கிறான். என்-ன ரசிப்பு...?

முழுக் கவிதையைப் படித்தால் சுவையாகவும்,வேடிக்கையாகவும் இருக்கும்.

"வெ-றும்" மனிதனாக இருப்பதை விட நல்ல ரசிகனாக இருப்பதால் பல பலன்கள் உண்டு.

இனி காற்-றில் கயி-று ஆ-டு-வ-தை நீங்கள் கண்-டு -காள்-ளா-மல் -பா-வீர்-க-ளா?

மு---டி-யு-மா?...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X