For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ருக்மிணி தேவி அருண்டேலுக்கு இந்திய நடனம் மீது அக்கறை பிறக்கக் காரணம் அன்னா பாவ்லோவா. ரஷியாவைச் சேர்ந்த இந்த நடன மாது1928- ஆண்டு இந்தியா வந்தார். மும்பையில் வைத்து அவருடன், ருக்மிணிக்குத் தொடர்பு ஏற்பட்டது.

இந்திய நடனக் கலை மீது ஆர்வம் காட்டுமாறு ருக்மிணிக்கு பாவ்லோவா அறிவுரை வழங்கினார். அப்போது பரதநாட்டியத்திற்கு நல்ல பெயர் இல்லாதநிலை இந்தியாவில்.

என அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி மற்றும் ஜீவரத்தினம் ஆகியோர் இந்த நடனத்தை ஆடினர். இந்த நடனத்தை பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைஆகியயோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நடனம் ருக்மிணிக்குள் ஒரு இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தியது.

சதிர் ஆட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் ஊற்றெடுத்தது. கற்றுக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து விட்டால், சாதிக்காமல் விட மாட்டார்அல்லவா?. ஆனால் ருக்மிணி சதிர் கற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அவர் கற்க முயன்றபோது நல்ல குரு கிடைக்கவில்லை. அழியும்தருவாயில் சதிர் இருந்ததே அதற்குக் காரணம். கற்றுக் கொடுக்கவும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதையடுத்து மைலாப்பூரைச் சேர்ந்த கெளரி அம்மாள் என்பவரிடம் சதிர் கற்கத் துவங்கினார் ருக்மிணி தேவி. அப்போது அவருக்கு 29 வயது. நடனம்கற்கும் வயதல்ல. இருப்பினும் வைராக்கியம் அவரைக் கற்கத் தூண்டியது. பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரத்திடம் நடனம் கற்க வேண்டும் என்ற அவா,ருக்மிணிக்குள் எழவே அவரை அணுகினார். ஆனால், ருக்மிணி சீரியஸாக கற்றுக் கொள்ளமாட்டார் எனவே கற்றுத் தர முடியாது என்று பிள்ளைவாள்கூறி விட்டார். இருப்பினும் ருக்மிணியின் பிடிவாதம் வென்றது. ருக்மிணியின் குரு ஆனார் பிள்ளைவாள்.

1935-ல் முதன் முதலாக தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டார் ருக்மிணி. பிரம்மஞான சபையின் வைர விழாவில் அவரது நடனம் அரங்கேறியது.2000க்கும் மேற்பட்டோர் கூடி அவரது நடனத்தைக் கண்டுகளித்தனர்.

ருக்மிணியின் அரங்கேற்றத்தைக் காண வந்திருந்த பலரில் ஒருவரான அயர்லாந்து நாட்டுக் கவிஞரான டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ் என்பவர், பரதநாட்டியத்தைவளர்க்கும் விதத்தில் அகாதமி போல ஒன்றை உருவாக்கினால் என்ன என்று ருக்மிணிக்கு யோசனை வழங்கினார்.

இதுதான் கலாஷேத்ரா என்ற ஆல மரம் உருவாக வழி வகுத்தது. ருக்மிணி கூறுகிறார்...டாக்டர் ஜேம்ஸின் யோசனை எனக்குள் மறுபடியும், மறுபடியும்வந்து கொண்டிருந்தது. இதுவே பின்னாளில் கலாஷேத்ரா என்ற கலைக் களஞ்சியம் உருவாக துணை நின்றது. முதலில் சர்வதேச கலை அகாதமி என்ற பெயரில்கலாஷேத்ரா துவக்கப்பட்டது. சிறிய அளவில் துவக்கினேன் என்கிறார் ருக்மிணி.

கலாஷேத்ரா மற்றும் ருக்மிணியின் சிறப்புகள் மெல்லப் பரவியது. தென்றலைப் போல மெதுவாகப் பரவிய இது, மெல்ல புயலாக மாறி வெகு வேகமாககலைப் பிரியர்களை தட்டியெழுப்பியது. கலாஷேத்ராவைத் தேடி பல கலைக் கால்கள் ஓடோடி வந்தன.

(வளரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X