• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதக்குட்டையில் லாப மீன் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க

By Staff
|

சங்கராச்சாரியார் கைதுக்குப் பின், எத்தனையோ நாடகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பாரதீய ஜனதா கட்சி நாடகம்ஆடத் தனக்கு தகுதி இல்லை என்பதை மிக அழகாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அந்த கட்சி ஆடும் கோமாளி ஆட்டத்தைப் பார்த்தால்பரிதாபம் தான் மிஞ்சுகிறது. சங்கராச்சாரியார் வழக்கை மிக சிக்கலாக்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? கண்டிப்பாக தமிழக முதல்வர்இல்லை.

சாட்சாத் சங்கப்பரிவாரங்களும் அதன் ஒட்டு வால் மாதிரி தொங்கிக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வும் தான். சங்கராச்சாரியார் குற்றமற்றவர்என்பதற்கு இவர்கள் தரும் தாரம் என்ன தெரியுமா?

1.அவர் நல்லவர்

2.அவர் அப்படி செய்யவே மாட்டார்

3.அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்

4.அவர் குழந்தை மாதிரி!

எவ்வளவு உறுதியான ஆதாரம் பாருங்கள். இந்த ஆதாரங்களைத் தான் கடந்த ஒரு மாதமாக சட்டமன்றம்,பாராளுமன்றம், பத்திரிக்கைகள்,ஏன் நீதிமன்றம் எல்லாவற்றிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது கேட்டால் சிரிக்கமாட்டார்களா? தமிழக காவல் துறைஅடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. இந்த ஆதாரங்களுக்கு யோக்கியமாய் பதில் சொல்லாமல் இப்படியெல்லாம்குழந்தைத் தனமாய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Jayendrarகொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; உங்கள் பையன் தெருவோரம் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறான், குடிக்கிறான் என்று யாராவது அந்தபையனின் தாயாரிடம் போய் சொன்னால், "அய்யய்யோ! என் பையன் பச்சைக்குழந்தை மாதிரி!" என்று சொல்லும் பேதைப்பெண்ணுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?. இவர்களின் நம்பிக்கையைக் கண்ணைக் கட்டிக் கொண்டு நிற்கிற நீதி தேவதைஅப்படியே வாரி தன் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவது மக்களை ஏமாற்றும் கயமைத்தனம் அல்லாது வேறு என்ன?

சங்கராச்சாரியாரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட இராமகோபாலன் - அசோக் சிங்கால் போன்றவர்கள் சிறைவாசலில் சூடம் கொளுத்திப்போட்டு சபித்துக் கொட்டுவதை விட கொஞ்சம் மனசாட்சியோடு யோசிக்கவேண்டும். ஆட்டோ சங்கர், இது போல நல்லவர் என்று அவர்மீது நம்பிக்கை கொண்ட ஒரு 1,000 பேர் சொல்லியிருந்தால் இந்தக் கூட்டம் ஒப்புக் கொண்டிருக்குமா?

ஸ்ரீரங்கம் உஷாவை கூப்பிட்டு விசாரித்தால், ஐயோ, ஒரு புற்றுநோயாளியைப் போய் மனசாட்சியில்லாமல் விசாரிக்கிறார்கள் என்றுகத்துகிறார்கள். பதிலுக்கு, காவல்துறையினர் அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை சங்கராச்சாரியார் உஷாவுக்கு பேசியதொலைபேசி ரசீதைக் காட்டினால்,நோயாளிக்கு ஆறுதல் சொன்னால் தப்பா? என்று பாய்ந்து கொண்டு பரிந்து பேசுகிறார்கள். இதேபோன்று புற்றுநோயோ, எய்ட்ஸோ பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இல.கணேசன்,வேதாந்தம்,ராஜா வகையறாக்கள் அதிகாலை மூன்றுமணிக்கு மூன்று மணிநேரம் பேச முடியுமா?

சம்சாரிகளே செய்யத் துணியாத ஒரு காரியத்தை, சந்நியாசி செய்யலாமா? என்று சங்கப்பரிவாரங்களுக்குத் தெரியாதா? பின் ஏன் இப்படிதுடிக்கிறார்கள். எல்லாம் அதிகாரம் மையம் சரிந்து விழாமல் தடுக்கும் முயற்சி அல்லாது வேறு என்ன? ஆரம்பத்தில்சங்கராச்சாரியாருக்குப் பரிந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எல்லாம் இப்போதுஅம்மாவின் அதிரடி அஸ்திரத்தால் ஆடியும், அடங்கி போய் விட்டார்கள். ஆனாலும் பாஜக இதை ஊதி, ஊதி பெரிதாக்கி வெடிக்குமாஎன்று பார்க்கிறது.

இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றெல்லாம் புஸ்வாணம் வெடித்துப் பார்த்தார்கள். இது தமிழ்நாடு. என்ன தான் நடிகர்களின்கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யும் அதிஅற்புத தமிழர்கள் இருந்தாலும், கொஞ்சம் சுயபுத்தியும் அவர்களுக்கு உண்டு. அவர்களைஅவ்வளவு கேவலமாக எடை போட்டு விடாதீர்கள். இது ஒன்றும் உத்தரபிரதேசமோ அல்லது குஜராத்தோ அல்ல. நினைத்தவுடன் பற்றிஎரிவதற்கு. வீராவேசமாக நீங்கள் அறிவித்த போராட்டம், பந்த் எல்லாம் மருந்துக்குக் கூட மக்களால் மதிக்கப்படவில்லையே! இதைவிடவா வேறு அவமானம் வேண்டும்.

போராட்டம் நடத்துபவர்களுக்கும் தகுதி வேண்டும். போராட்டத்தின் காரணமாக இருப்பவர்களுக்கும் தகுதி வேண்டும். இரண்டும்இல்லாத நிலையில் சும்மா இருப்பதே சுகம். இல்லாவிட்டால் எதற்கும் துணிந்தவர்கள், அடுத்த அத்தியாயத்தையும் திறந்து காட்டிவிடப்போகிறார்கள்.

- குறிஞ்சிவேந்தன்(kurinjivenden@yahoo.com )

(தமிழ்நாட்டுத் தமிழன்) மலேசியாவிலிருந்து.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X