For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்-தியாகுவுடன் ஒரு சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News


பேட்டி: சுதா அறிவழகன்

ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி,அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும்முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப்பங்காற்றுபவர்.

ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்துநம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை:

ஈழம் இன்று?

ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்கமுடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்களஅரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள்முறியடித்து விட்டார்கள்.

2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழல் இருந்து வந்தது. ராஜபக்ஷேஅதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோதே, அமைதிச் சூழலை கெடுப்பதாக வாக்குறுதிகொடுத்து தான் ஜெயித்தார். அதை நேரடியாக அவர் சொல்லாவிட்டாலும் கூட,அமைதி ஒப்பந்தத்தை திருத்தி எழுதுவோம் என்று சொல்லி ஜெயித்தார்.

அதிகாரப் பரவல் என்ற கருத்தையே நிராகரித்து, தமிழர்களின் தனி அடையாளத்தைவெறுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின்ஆதரவோடும், கூட்டணியோடும் தான் அவர் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது.

சிங்கள மக்களுக்கும், பேரினவாதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போதுஅவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மீண்டும் போர் தொடுப்பது, போரின் மூலம்தீர்வு காண்பது, விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பது, தமிழீழத்திற்கான வாய்ப்பேஇல்லாமல் செய்வது ஆகியவைதான் ராஜபக்ஷேவின் இப்போதைய செயல்பாடுகள்.

அதேபோல போர் நிறுத்த உடன்படிக்கையின் மிக முக்கியக் கூறுகளிலிருந்துஅதாவது, மீன் பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது, அதி உயர்பாதுகாப்பு வளையங்களை அகற்றுவது, துரோக தமிழ்க் குழுக்களுக்கு வழங்கப்பட்டஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போன்ற வாக்குறுதிகளிலிருந்து சிங்கள அரசு பின்வாங்கி விட்டது. ஜெனீவா பேச்சுவார்த்தையின்போதும் இந்தப் பிரச்சினைகள்தான்எழுப்பப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காத சிங்கள அரசு, இப்போது கூடுதலாக யாழ்ப்பாணமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உணவு,மருந்து போவதை தடுத்திருக்கிறார்கள். ஏதோ அந்த மக்கள் எல்லாம் குற்றம்செய்தவர்கள் போல, பொருளாதாரத் தடையை விதித்துள்ளனர்.

சிங்கள அரசின் இந்த செயலை, ராஜபக்ஷேவை ஆதரிக்கும் பன்னாட்டுஅமைப்புகளும், ஏடுகளும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம நெடுஞ்சாலையை திறக்கப் போவது போல பேச்சுஎழுந்தது. ஆனால் ஆளும் வர்க்கத்தில் இருக்கக் கூடிய சில அதிகார மையங்களும்,ராணுவத் தலைமையிடமிருந்து வந்து பிடிவாதப் போக்கும் இந்த முயற்சிகளைமுறியடித்து விட்டன.

அதேபோல போரின் மூலம் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க முடியும்,கடலில் கூட்டு ரோந்து செல்வதன் மூலம் புலிகளை வெல்ல முடியும், பணிய வைத்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டு, தீவிரப் போர் தயாரிப்பிலும், முயற்சியிலும்ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டிய காரணிகள்: ஈழத்தில் உள்ள தமிழர்களைப் போல பன் மடங்குதமிழர்கள் இந்தியாவில் உள்ளனர். 6 கோடித் தமிழர்களின் தாயகம் இந்தியாவில்குடியிருக்கிறது. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழீழ மக்கள் பால்கொண்டுள்ள ஒருமைப்பாட்டு உணர்வை, நேச உணர்வை தமிழக மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

இந்த மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியா, தமிழீழ மக்களுக்குச் சாதகமான,குறைந்தது, அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கக் கூடிய அணுகுமுறையைகடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து அது வரவில்லை.

அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நேர்ந்து, ஒரு சிங்களனைக்கூட இந்தியப் படைகள் கொல்லவில்லை. மாறாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்,இந்திய வீரர்களால் சிதைக்கப்பட்டவர்களும் தமிழ்ப் பெண்கள்தான்.தமிழர்களுக்குத்தான் இந்திய அமைதிப்படை அதிக சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர்வேறு வழியின்றி திரும்பி வந்தது.

இந்திய, இலங்கை அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சமான வடக்கு கிழக்குஇணைப்பைக் கூட இன்றைக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் செல்லாது என்றுஅறிவிக்கிறபோது, அதுகுறித்து இந்தியா கவலைப்படவில்லை. ஒரு சர்வதேசஉடன்படிக்கையை, இரு நாட்டுத் தலைவர்கள் சேர்ந்து செய்த உடன்படிக்கைபோகிறதே, நமது வாக்குறுதி என்னவானது என்று இந்தியா கவலைப்படவில்லை.

சென்னைக் கடற்கரையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி,அமெரிக்காவுக்குப் போகவிருந்தவரை, பயணத்தைத் தாமதப்படுத்தி, ராஜீவ் காந்திஅழைத்து வந்து, தூக்க முடியாத எம்.ஜி.ஆரின் கையைத் தூக்கிக் காட்டி, உலகத்தில்தமிழர்களுக்கு 2வது மாநிலம் உருவாகிறது என்று கூறினார்களே, அதைப் பற்றிஇப்போது பேசக் கூட இல்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நேரடியாகவும், சுற்றடியாகவும், ராணுவ வகையில்சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகளைச் செய்து வருகிறது. லீத்தல் வெப்பன், நான்லீத்தல் வெப்பன் என்றெல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். ரேடார் நான்லீத்தலா, லீத்தலா என்று ஆராய்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்க் கப்பல்கொடுக்கிறார்கள். பயிற்சியும் கொடுக்கிறார்கள். பயிற்சி லீத்தலா, நான் லீத்தலா?இந்தியா பதிலளிக்க வேண்டும்.

இலங்கைக்கு, அமெரிக்காவாலோ, பாகிஸ்தானாலோ, சீனாவாலோ ஆபத்துஏற்பட்டிருக்கிறது, எனவே அந்தப் படைக்கு பயிற்சி கொடுக்கிறோம் எனஇந்தியாவாலேயே கூற முடியாது. அவர்களுடைய உள்நோட்டுப் பிரச்சினை எனக்கருதப்படக் கூடியது தமிழீழ பிரச்சினை மட்டுமே.

அல்லது, முன்பு ஜேவிபி கலகம் செய்தது போல சிங்களர்களுக்குள் புரட்சி நடக்கிறது,எனவே அதை ஒடுக்க ஆயுதம் தருகிறோம் என்றும் இந்தியாவால் கூற முடியாது.

இந்தியா, இலங்கைக்கு என்ன உதவிகள் செய்தாலும், அது தமிழர்களுக்குஎதிரானதுதான். இதை தெரிந்தே இந்தியா செய்து கொண்டிருக்கிறது. இரு தரப்புகள்இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர்கள்தான் தீர்வு காண முடியும். தமிழர்களைஒதுக்கி வைத்து விட்டு, தமிழர் சார்பான அமைப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, இதைஇரு நாட்டு அரசுகளின் பிரச்சினையாக கருதியதுதான் ராஜீவ் காந்தி செய்த தவறு.

1985ம் ஆண்டு நடந்த திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா, இலங்கை அமைதிஒப்பந்தம் வரை, பொதுவாக இருந்து பேச வைக்கிற முயற்சியை, அனுசரணையாளர்என்ற பொறுப்பை தவிர்த்து விட்டு, தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, புரோகிதரே,பொண்ணுக்குத் தாலி கட்டுவது போல, இந்தியாவே இறங்கி ஒப்பந்தம்போட்டார்களே அதுதான் அடிப்படைத் தவறு.

இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலும் பேசவேண்டும். ஆனால் ஒரு தரப்போடு டூ விட்டது போல உள்ளனர். புலிகளோடுபேசுவதற்கே வழியில்லை. இன்றைக்குக் கூட இவ்வளவு நடவடிக்கை எடுத்தபோதும்,இலங்கையில், புலிகளுக்கு தடை விதிக்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்துகொண்டுள்ளது. தடை பண்ணி விட்டால் யாரிடம் பேசுவது, பிற்காலத்தில் பேசவாய்ப்பே இல்லாமல் போய் விடுமே?

ஆனால் சிக்கலுக்கு நேரடித் தொடர்பில்லாத இந்தியா புலிகள் அமைப்பை தடைசெய்துள்ளது. தடை செய்வதற்காக இந்தியா சொன்ன குற்றச்சாட்டுக்கள் எல்லாமேபொய்.

தமிழகத்தைப் பிரிக்கப் பார்த்தார்கள், ஈழத்தை இணைத்து அகண்ட தமிழகம்அமைக்கப் பார்த்தார்கள், இந்தியப் பிரிவினைக்கு உதவி செய்தார்கள் என்று அவர்கள்கூறிய எதுவுமே உண்மை இல்லை. இது இந்திய அரசுக்கும் தெரியும். இன்றும் அந்தப்பொய்யை வைத்துக் கொண்டுள்ளதால்தான் இரு தரப்பிலும் பேச முடியவில்லை.

இரு தரப்பையும் சமமாக கருத மறுக்கிறது இந்தியா. ஆயுதத் தலையீடு, ராணுவத்தலையீடு மற்றும் இப்போது ராஜதந்திர தலையீட்டிலும் இந்தியா இறங்கியுள்ளது.சமீபத்தில் இலங்கையில் 2 கட்சிகளுக்கடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்பின்னணியில் இந்தியா உள்ளது. இது பகிரங்க ரகசியம்.

ரணிலை இங்கே வரவழைத்து அரசுடன் கையெழுத்துப் போட வேண்டும் என்றுசொல்லியது, மேனன் போன்றவர்களை அங்கே அனுப்பி பேரத்தை பேசி முடித்துவைத்தது இந்தியாதான்.

இதன் நோக்கம் என்ன?

பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும். அது அந்த மக்களுக்கான தீர்வாஎன்ற கவலையெல்லாம் இல்லை. ஒரு தீர்வு, அவ்வளவுதான். ராஜபக்ஷே இந்தியாவந்தபோது கூட பஞ்சாயத்து ராஜ் பற்றிப் பேசுகிறார். எனவே இது இந்தியபாணியிலான தீர்வு, இதற்கென்று வரையறை கிடையாது.

இந்தத் தீர்வுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் தமிழர் பிரதிநிதிகள்,உண்மையில் அவர்கள் தமிழர்களுக்கான பிரதிநிதிகளே கிடையாது. தமிழ் மக்களின் 1சதவீத ஓட்டுக்களைப் பெறக் கூட முடியாதவர்கள் எல்லாம் உள்ளனர். ஒவ்வொருநாளும் சிங்கள ராணுவக் கூடாரத்திற்குள்தான் குடும்பம் நடத்தக் கூடிய நிலையில்உள்ளவர்களும் அங்கு உள்ளனர். இவர்களை தமிழர்களின் அடையாளமாக இலங்கைஅரசு காட்டிக் கொள்கிறது.

இலங்கையில் 21 பேர் தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ளனர். ஆனால் தமிழர்களின்துரோகியாக கருதப்படும் டக்ளஸ் தேவானந்தாவை மட்டும் அழைத்துப்பேசுகிறார்கள். பிரதிநிதித்துவமே இல்லாத ஆட்களை வலியுறுத்தி டெல்லிக்குக் கூட்டிவந்து பேச வைக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசிவிட்டு பொதுவான தீர்வை எட்டி விட்டோம் என்றுசொல்வதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவது, அப்படிச் செய்வதன் மூலம்ராணுவ ரீதியான தீர்வை அடைய நினைக்கிறார்கள். இப்படிச் செய்து விட்டு,புலிகள்தான் பிடிவாதமாக சண்டை போடுகிறார்கள் என்று கூறி தனிமைப்படுத்திசர்வதேச அளவில் புலிகளை தனிமைப்படுத்துவது. இதுதான் இந்திய அரசின்எண்ணம். இது ராஜதந்திர தலையீடு, கொள்கைத் தலையீடு.

இருப்பதிலேயே இந்த கொள்கைத் தலையீடுதான் மோசமானது. இந்தியாவிலிருந்துசென்ற அமைதிப் படையினர் அங்கு 50,000 தமிழர்களைத் திரட்டி ஆயுதங்கள்கொடுத்தனர். ஆனால் ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. இந்திய அரசு கொடுத்தஆயுதங்களை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் பத்திரமாக தங்களதுவீடுகளுக்குப் போய் விட்டனர்.

எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டதாகஇருக்க வேண்டும் என இந்தியா கூறுகிறது. இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும்ஏற்க முடியாது என்று இந்தியா கூறுகிறது. அங்கு ஒருமைப்பாடுதான் பிரச்சினையேஎன்கிறபோது, அதை வைத்து எப்படி தீர்வு காண முடியும்? அரசியலமைப்பே சிக்கல்என்றால் அதற்கு உட்பட்டு எப்படித் தீர்வு காண முடியும்?

ஒரு நோயைத் தீர்க்க அந்த நோய்க்குக் காரணமான காரணிகளையே வைத்து எப்படிசரி செய்ய முடியும்? வங்கதேசத்தில் சிக்கல் வந்தபோது பாகிஸ்தான்அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காண இந்தியா சொல்லவில்லை. அதேபோலபாலஸ்தீனம், இஸ்ரேல் ஒருமைப்பாட்டுக்குள் தீர்வு காண வேண்டும் என்றுசொல்லவில்லை. கிழக்கு தைமூர் விஷயத்திலும் அப்படிச் சொல்லவில்லை.

நமீபியா தென்னாப்பிரிக்காவிடமிருந்து பிரிய போராடியபோதும்,எத்தியோப்பியாவுக்கு எதிராக எரித்ரியா போராடியபோதும் நாம் அப்படிச்சொல்லவில்லை. அவர்களுக்கு எல்லாம் இல்லாத நிபந்தனையை தமிழர்களுக்கு

மட்டும் விதிப்பது ஏன்?

இலங்கை ஒருமைப்பாட்டுக்குள் உட்பட்டு தீர்வு காணுங்கள் என்று நிபந்தனைவிதிப்பது எந்த வகையில் நியாயம்? சிங்கள அரசுக்குச் சார்பான கொள்கைப் பாட்டைவைத்துக் கொண்டு அணுகுகிறது இந்தியா என்றுதான் இதற்குப் பொருள்.

உண்மையில் தமிழீழம், சிங்களம் என்பது இரு வேறு தேசம். இலங்கைஅரசியலமைப்புச் சட்டத்திலேயே சிங்களமும், தமிழும் இரு தேசிய மொழிகள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மொழி என்பது வேறு. ஆனால் தேசிய மொழிகள்என்பது இரு வேறு இனங்கள் என்று பொருள்.

ஐநா மனித உரிமைப் பிரகடனத்தின்படி, ஒவ்வொருவரும் ஒரு தேசிய இனத்தவராய்இருக்க உரிமை உள்ளது. ஒன்றாக இருக்கவோ அல்லது பிரிந்து செல்லவோ முடிவுசெய்ய, சுய நிர்ணய உரிமை உள்ளது. தமிழர்கள் ஒரு தேசிய இனம், தேசிய மொழிஎன்கிறபோது, சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டா, இல்லையா? இதற்குஇந்தியாவின் பதில் என்ன?

சுய நிர்ணய உரிமை உண்டு என்றால் அதை பயன்படுத்துகிற முறை என்ன? அதையார் தீர்மானிப்பது? யார் அந்த மக்களோ அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.சமீபத்தில் கனடாவில், ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது.

அங்குள்ள கியூபெக் பிராந்தியத்தில் பிரெஞ்சுதான் தேசிய மொழி. மற்ற 3மாகாணங்களிலும் ஆங்கிலம்தான் தேசிய மொழி. எனவே கியூபெக்கை தனி தேசம்என கனடா அங்கீகரித்திருக்கிறது.

கியூபெக் ஒரு மாநிலமோ, மாகாணமோ அல்ல, அது ஒரு தேசம் எனஅங்கீகரித்துள்ளனர். அதை ஒரு தேசமாக ஏற்றுள்ளனர். அங்கு என்ன அரசு வரவேண்டும் என்பதுதான் அடுத்த பிரச்சினை. முதலில் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

இந்த அங்கீகாரத்தை கொடுக்காததால் தான் தமிழீழ மக்கள் சுய நிர்ணய உரிமைப்போராட்டத்தில் குதிக்க நேரிட்டது. ஏற்கனவே இருந்த, இப்போது இழந்து விட்டஇறையாண்மையை மீட்க நடக்கும் போராட்டம் இது.

சமீபத்தில் பிரிட்டிஷ் தூதர் கொழும்புக்கு வந்தபோது, இந்த துன்பத்திற்கு நீங்கள்எந்தளவுக்கு பொறுப்பு. காரணம் நீங்கள்தானே இந்த தேசத்தை 200 ஆண்டுகள் ஆட்சிசெய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சொல்கிறார், நாங்கள் இந்தத்தீவுக்கு வந்தபோது இலங்கை என்ற நாடே இல்லை. 3 அரசுகளாக இருந்தது.நாங்கள்தான் நிர்வாக வசதிக்காக ஒன்றாக சேர்த்தோம்.

அப்போது இருந்தது கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு. நாங்கள் இந்ததேசத்தை விட்டு வெளியேறும்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினோம்.அதில் தமிழ்ச் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி விட்டதாகஇப்போது கருதுகிறோம் என்றார்.

எனவே இது வரலாற்றில் இருந்த, இழந்த இறையாண்மையை மீட்க நடக்கும்போராட்டம். இப்படிப்பட்ட போராட்டத்தை அந்த மக்கள் நடத்துகிறார்கள் என்றால்அதை முதலில் இந்தியா ஒப்புக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். அதை நடத்துகிறஇயக்கத்தை அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்குவதுதான் சமத்துவமாகஇருவரையும் கருதுவதற்கான அடையாளம். அப்படி இருந்தால்தான் தீர்வுக்கு வழிகாண முடியும்.

இந்தியா இப்போதைய கட்டத்தில் இரண்டைச் செய்ய வேண்டும். தமிழீழ மக்களைதேசிய இனம் என்றும், அப்போராட்டத்தை தேசிய சுய நிர்ணயப் போராட்டம் என்றும்அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். இதைச் செய்தால்தான் போரைத் தவிர்க்கும் சூழ்நிலை உருவாகும். வேறுஎதைச் செய்தாலும், உணவு அனுப்பினாலும், மருந்து அனுப்பினாலும் அது சரியானதீர்வாக இருக்க முடியாது.

கருணாநிதியின் நிலைப்பாடு?

முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ தனியாக அயலுறவுக் கொள்கை என்று எதுவும்கிடையாது. இவர்கள் தமிழீழப் போராட்டத்தை அங்கீகரிக்கிறார்களா, இல்லையாஎன்பது பிரச்சினை இல்லை. இதை உணர்ந்துதான், டெல்லியின் கொள்கைதான் எனதுகொள்கையும் என்று கருணாநிதி கூறுகிறார்.

தமிழகத்தில் யார் முதல்வராக இருந்தாலும், சட்டம் என்ன சொன்னாலும், அதிகாரப்பட்டியல் என்ன சொன்னாலும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தைபிரதிபலிக்கிற உரிமை, கடமை சட்டசபைக்கு உண்டு. அங்கு நிறைவேற்றப்படும்தீர்மானத்தை சட்டமாக்க முடியாது. ஆனால் அதற்கென்ற ஒரு அற மதிப்பு உண்டு.செஞ்சோலைச் சம்பவத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்நாடாளுமன்றத்தில் அப்படி நிறைவேற்றப்படவில்லை. கண்டிக்கிறோம் என்றுவலியுறுத்தக் கூட இல்லை.

திமுக தலைவர் என்ற முறையிலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் தமிழீழம்தான் தீர்வு என்பதை கருணாநிதி ஏற்றுக் கொண்டவர். அமைதிப் படையை அமளிப்படை என்று கண்டித்தவர். இந்திய அரசின் பொய் பசப்புரைகளை கண்டித்தவர்.இப்போதும் அதில் அவர் உறுதியாக இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லவேண்டும்.

தமிழீழம்தான் எனது கொள்கை என்று அவர் பகிரங்கமாக அறிவிக்கட்டும். ஆனால்தமிழீழத்தை ஏற்க முடியாது என்ற கொள்கை கொண்டது மத்திய அரசு. ஆனால்மத்திய அரசின் கருத்துதான் எனது கருத்தும் என்று கருணாநிதி கூறுகிறார். எனவேகருணாநிதி தனது நிலையை தெளிவாக விளக்க வேண்டும்.

இந்திய அதிகாரிகளின் பங்கு?

எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் அதிகாரிகள், அரசின் கொள்கையைசெயல்படுத்துகிறார்கள். ஒருவர் தீவிரமாக இருக்கலாம், இன்னொருவர்ஜி.பார்த்தசாரதியைப் போல அடக்கி வாசிக்கலாம்.

தீக்ஷித் என்கிறபோது தீவிரமான அணுகுமுறை இருக்கலாம். ஆளுக்கு ஆள்வேறுபடலாம். மன்மோகன் சிங்கை நல்லவராகக் காட்ட வேண்டும் என்பதற்காகமேனனையும், நாராயணனையும குறை சொல்ல வேண்டியதில்லை. முதலில் அரசின்கொள்கை மாற வேண்டும்.

கடந்த காலத்தில் அயலுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன், ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜீவ்தன்னிடம் கலந்து கொள்ளாமலேயே முடிவுகளை எடுக்கிறார் என்று குற்றம் சாட்டிதனது பதவியைத் தூக்கி எறிந்தார். ஈழப் பிரச்சினையில் ராஜீவின் அணுகுமுறை தவறுஎன்றார். புலிகள் மீது மதிப்பு வைத்திருந்தவர். போராட்டத்தை மதித்தவர்.

தீக்ஷித் கூட பேட்டி கொடுக்கும்போது ஜெயவர்த்தனேவுக்கு பிரச்சினையை தீர்க்கும்அக்கறையே கிடையாது. இந்திய ராணுவத்தை இழுத்து விட்டு, புலிகளை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.

மேனனும், நாராயணனும் சென்னை வந்தனர், கலைஞரை சந்தித்துப் பேசினர் என்பதைமட்டும் வைத்து முடிவு செய்யக் கூடிய பிரச்சினை அல்ல இது.

கருணாநிதியை சந்தித்த பின்னர் நாராயணனிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள்.இலங்கைக்கு உணவுப் பொருள் அனுப்பப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங்கூறியுள்ளாரே, அதை எப்படி எந்த வழியில் கொடுக்கப் போகிறீர்கள் என்றுகேட்கின்றன்ர. அதற்கு நாராயணன் கூறுகிறார், கொடுக்க வேண்டுமா என்பது குறித்துயோசிக்க வேண்டும். தேவை ஏற்படுமாயின் எப்படிக் கொடுப்பது என்பது குறித்துஅப்போது பார்க்கலாம் என்கிறார்.

இத்தனை டன் உணவுப் பொருட்களை கொடுக்கப் போகிறோம் என்று பிரதமர்கூறியுள்ளார். ஆனால் யோசிக்க வேண்டும் என்று நாராயணன் கூறுகிறார். யாரைஏமாற்ற பிரதமரின் அறிவிப்பு? எனவே இந்திய அரசு, தவறான, மிக மோசமான,சிங்கள அரசுக்குத் துணை போகிற, தமிழர்களை, தமிழகத்தில் உள்ள தமிழர்களையும்சேர்த்து துச்சமாக மதிக்கிற ஒரு அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது.

இலங்கை படையினருக்கு பயிற்சி, கூட்டு ரோந்து குறித்து?

மத்திய அரசு எப்போதுமே இரட்டை நிலையை எடுத்ததில்லை. உண்மையில் அதுஒற்றை நிலைதான். ஒன்று உண்மை, இன்னொன்று வேஷம். தமிழர்களுக்காக கண்ணீர்வடிப்பது போல காட்டிக் கொள்வது, இலங்கை அரசை எச்சரிக்கிறோம் என்பது போலஅமைதித் தீர்வு என்பதெல்லாம் நாடகம். உண்மையில், சிங்கள அரசின் போர்முயற்சிக்கு துணை போவதுதான் இந்திய அரசின் எண்ணம்.

நம்மிடம் கடலோரக் காவல் படை உள்ளது, இரு தரப்பும் காவல் காத்துக்கொண்டுதான் உள்ளனர். இவர்கள் அவர்களுக்கும், அவர்கள் இவர்களுக்கும்தகவல்களை பரிமாறிக் கொண்டுதான் உள்ளனர். இரு நாட்டு வீரர்களும் தனித் தனிகப்பலில் பயணிக்கிறார்கள் அவ்வளவுதான். இரு வீரர்களும் ஒரே கப்பலில் பயணிக்கவேண்டும் என்பது ராஜபக்ஷேவின் பேராசையாக இருக்கலாம். எப்படியாவதுபிரச்சினைக்குள் இந்தியாவை இழுக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

இந்தியா நேரடியாக படையை இறக்கி போரில் தலையிடாமல் இருப்பதற்குக் காரணம்;வடக்கே காஷ்மீரில் மண்டை இடி. வட கிழக்கில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது,நேபாளத்திலும் அடி. இத்தனை சிக்கல்கள் இருப்பதால், எதற்காக ஈழத்தில் காலவைக்க வேண்டும் என நினைக்கிறது. ஈழத்தில் கால் வைத்தால், காஷ்மீரில் தலைபோய் விடும்.

விடுதலைப் புலிகள் போரைத் தவிர்த்து அமைதி வழியில் தீர்வு காண எல்லாமுயற்சிகளையும் செய்து பார்த்து விட்டனர். கடந்த கால கசப்பானஅனுபவங்களையும் கூட ஒதுக்கி வைத்து விட்டு முயற்சி செய்து விட்டார்கள்.இதற்காக பெரிய இழப்புகளையும் சந்தித்தார்கள். இறங்கி வந்தும் பார்த்து விட்டனர்.

இதையும் மீறி போர் திணிக்கப்படுகிறது என்றால் அதற்கு முகம் கொடுப்பதைத் தவிரஅவர்களுக்கு வேறு வழியில்லை. வியட்நாம் மக்களைப் போல எதையும் சந்தித்துமுறியடித்து வென்றெடுக்க அவர்களால் முடியும் என்று நம்புகிறேன்.

தமிழகத்தின் பங்கு?

ஈழத் தமிழர்களுக்கு முதலில் கடமைப்பட்டுள்ளது தமிழக மக்கள்தான், தமிழகம்தான்.அரசியல் பின்தளமாக இருக்கிற கடமை தமிழகத்திற்கு உண்டு. சீன விடுதலைக்குசோவியத் ரஷ்யாவும், தென்னாப்பிரிக்க விடுதலைக்கு ஆப்பிரிக்க மக்களும்,பாலஸ்தீன போராட்டத்திற்கு அரபு மக்களும் உதவியதைப் போல தமிழீழ மக்களின்போராட்டத்திற்கு, உயிர் வாழ்க்கைப் போராட்டத்திற்கு, தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும்.

தங்களது வாழ்க்கை அழிந்து விடாமல் நிற்பதற்கான தமிழீழ மக்களின்போராட்டத்திற்கு உதவ வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதற்காகபெட்ரோல், ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று பொருள் இல்லை. இந்தியஅரசின் கொள்கையை மாற்றுவதில், இயன்றால் அடியோடு மாற்றுவது, அதுதமிழர்களுக்கு எதிராக செலுத்தக் கூடிய வீரியத்தைக் குறைக்கும் பங்கு நமக்குஉள்ளது.

தமிழீழ மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தைஅங்கீகரிக்க வேண்டும். புலிகளுக்கான தடையை நீக்க வேண்டும். இந்த அடிப்படைக்கோரிக்கைகளுக்காக, தமிழக மக்களை ஒன்று திரண்டு உறுதியாக போராவடுதான் ஈழமக்களுக்கு செய்யம் உதவி. அதை தமிழக மக்கள் செய்வார்கள் என எங்களைப்போன்ற தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன. அந்த உணர்வுப் பொறியைஇத்தனை காலமாக பாதுகாத்து வந்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை இந்தப் பிரச்சினையில் பேசாமல் இருந்த பல கட்சிகளை பேசவைத்துள்ளோம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் இப்போது பேசமுன்வந்துள்ளனர். தேர்தல் சந்தர்ப்பவாத கட்சிகள் கூட தமிழீழத்திற்கு ஆதரவுதெரிவிக்க முன்வந்துள்ளன. இது மாற்றத்திற்கான அறிகுறி. அதை முறையாகப்பயன்படுத்தி இந்திய அரசை வலியுறுத்துவதன் மூலம் ஈழ மக்களுக்கு உதவி செய்யமுடியும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையின் தாக்குதல்?

கச்சத்தீவை நாம் இழந்தபோதே எல்லாவற்றையும் இழந்து விட்டோம். கொடுக்கக்கூடாது என்று தமிழக கட்சிகள் எல்லாம் கோரின. ஆனால் எல்லைப் பாதுகாப்பு,இறையாண்மை என்று எதுவும் தமிழகத்திற்கு இல்லாததால், மத்திய அரசு கச்சத்தீவைதூக்கிக் கொடுத்து விட்டது. அதை நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை.

தமிழ் இனம் இந்தியாவில் எந்தளவுக்கு அவலமான, நிராதரவான நிலையில்,நிலப்பரப்பை இழந்தாலும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதற்குஇது ஒரு சான்று.

மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சிங்களப் படையின் தமிழின விரோதப்போக்கே முக்கியக் காரணம். அவர்களுக்கு எல்லாத் தமிழர்களும் விரோதிகள்தான்,அனைவருமே விடுதலைப் புலிகள்தான். அதனால்தான் இலங்கையில் மீன் பிடிதொழிலையே தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இந்தியப் படையால் காக்க முடியவில்லை என்றால்,மீனவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்.

இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையும், கப்பல் படையும் மீனவர்களைபாதுகாக்கவில்லை. இதுவரை சிங்களப் படையுடன் இந்திய படை மோதியது,மீனவர்களை காப்பாற்றியது, மீட்டுக் கொண்டு வந்தது என ஒரு செய்தி கூடவந்ததில்லை. ஒருமுறை கூட இந்தியப் படைகள் அப்படி செயல்பட்டதில்லை.

புலிகளுக்கு தடை இல்லை என்ற இலங்கையின் முடிவு?

தடை இருக்கிறதா, இல்லையா என்பதில் பெரிய வேறுபாடு இல்லை. தடை இல்லைஎன்ற முடிவு சர்வசே அளவில் நாங்கள் ஜனநாயகத்தை காக்கிறோம், ஜனநாயகமாகஇருக்கிறோம். பாருங்கள் போரிடுகிற அமைப்பைக் கூட நாங்கள் தடைசெய்யவில்லை என்று காட்டிக் கொண்டு, ஜனநாயக தகுதியை உயர்த்திக் கொள்ளவேஇந்த நாடகம்.

நார்வே குழுவின் முயற்சிகள்?

நார்வேக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியமானாலும், அமெரிக்காவானாலும், பிரிட்டன்போன்ற நாடுகளானாலும் கூட அமைதித் தீர்வு என்பதை நிர்ணயிக்கிறபோது சிங்களஅரசை அங்கீகரிக்கப்பட்ட அரசாகவும், புலிகளை போராடுகிற கொரில்லாகுழுவாகாவும்தான் பார்க்கிறார்கள். ஆனால் நார்வேயின் அணுகுமுறைஎன்னவென்றால் இரு தரப்புகளையும் சம தரப்புகளாக கருதுகிறார்கள். எந்தத்தீர்வையும் நிபந்தனையாக விதிக்கவில்லை.

அமெரிக்கா , இந்தியா சொல்வது நிபந்தனையாக எந்தத் தீர்வையும் நார்வேகூறவில்லை. போர் வேண்டாம், அமைதித் தீர்வுக்கு வாருங்கள், என்ன தீர்வு என்பதைநீங்களே முடிவு செய்யுங்கள் என்றுதான் நார்வே கூறுகிறது. போர் நிறுத்த மீறல்கள்என்று வருகிறபோதுகூட சிங்கள அரசை நார்வே கண்டித்துள்ளது. இதற்கு வரலாற்றுக்காரணம் ஒன்றும் உள்ளது.

நார்வே நாடு பிறந்த விதம் அப்படி. 1904ல் ஸ்வீடன் நாடாளுன்றத்தில் இவர்களுக்குஓட்டுப் போட்டு பெரும்பான்மை அடிப்படையில், விரும்பினால் நார்வே தனியாகப்பிரியலாம் என அறிவித்தனர். நார்வே பிரிந்தது குறித்து என்ற தலைப்பில் லெனின்தனி அதிகாரமே எழுதியுள்ளார்.

தேசிய இனம் பிரிந்து போக விரும்பினால் அதற்கு ஆதாரமாக நார்வேயைத்தான்லெனின் உதாரணமாக குறித்துள்ளார். நார்வே பிறந்த விதமே அப்படித்தான் என்பதால்அவர்கள் இப்பிரச்சினையில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர்.

அமைதி பேசுவதற்கான அணுசரணையாளர், இரண்டு தரப்பையும் சமமாக கருதும்நிலைப்பாடு அவர்களிடம் உள்ளது. அற்றக் கூலியும், அனைத்து உரிமையும்வைத்துள்ள முதலாளியும் கூட சமமாக அமர்ந்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறமுடியும்.

ஈழத்தில் மீண்டும் முழு அளவில் போர் வெடிக்குமா?

பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையை, ஏதோ நாளைக்கே போர் மூளப் போகிறதுஎன்பது மாதிரி புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் உரையின் நோக்கம்,வழிமுறைகளைப் பற்றி அல்ல. அதன் பொருள், தனி அரசுதான் ஒரே தீர்வு என்பதைஎப்படி அண்மைக் காலத்திய நிகழ்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டுகிறார்.சிங்களப் பேரினவாதம் எந்தத் தீர்வையும் அழித்து விடும் என்றுதான் பிரபாகரன்சொல்கிறார். ராஜபக்ஷே அணுகுமுறை என்பது பேசிக் கொண்டே அழிப்பதுதான்.எனவேதான் நமக்கான தீர்வு, தனித் தமிழ் அரசுதான் என்பதை நினைவூட்டியுள்ளார்.வரலாற்று நோக்கில் பார்க்கும்போது, ஆயுதப் போர் மூலம் தீர்வு காண முடியும்என்பதுதான் சரி. புலிகளுக்கு மட்டும்தான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை,இலங்கை அரசுக்கு இல்லை, என்று சொல்ல முடியாது. ஆப்கானிஸ்தானில்அமெரிக்காவே ஆயுதம் மூலம்தான் தீர்வு காண முடிந்தது. காஷ்மீரிலும் இந்தியா பஜகோவிந்தம் பாடிக் கொண்டிருக்கவில்லை.ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தலையிட்டதே அமெரிக்காவுக்கு பேரிடியாகஅமைந்து விட்டது. எனவே என்னதான் புஷ் ஆசைப்பட்டாலும் இன்னெரு மண்ணில்கால் வைக்க வாய்ப்பே இல்லை.

ஈழத்தில் போர் வெடித்தால் இந்தியா தலையிடுமா, இல்லையா என்று கேட்டுப்பார்க்கத்தான் வேண்டும். அப்படியெல்லாம் பார்க்கும்போது, முடிந்தவரை நமதுபடைகளை தனிமைப்படுத்துவதும், நண்பர்களை ஆதரவாக திரட்டிக் கொள்வதும்,ஊசலாடக் கூடிய சக்திகளை செயழிக்கச் செய்வதும் போர் உத்திகளின் வழிமுறைகள்.இதையெல்லாம் தெரிந்தவர்கள்தான், புலிகள் அமைப்பின் தலைமையிடத்தில்உள்ளனர்.

போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். எப்படிவிடுதலைப் புலிகள் அதை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது படை வலிமை,தலைமையின் ராணுவ உத்தி, ஆயுத வலிமை இவற்றை மட்டும் பொறுத்ததில்லை.ஒவ்வொரு காலத்திலும் அது காரணிகள்.

புலிகளை மக்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் மேலும் வீரர்கள்அணிவகுப்பதற்கேற்ப மக்கள் எப்படி ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப்பார்க்கும்போது, இந்திய ராணுவத்தை சந்தித்த காலத்தைக் காட்டிலும், அதன் பிறகுநடந்த நிகழ்வுகளைக் காட்டிலும், போர் மூளுகிறபோது பன்மடங்கு கூடுதலானஅரசியல் விழிப்போடும், ஆயத்தத்தோடும், கட்டமைப்புகளோடும் புலிகள் தயாராகஉள்ளனர். முன்பைக் காட்டிலும் இப்போது வலு அதிகம் உள்ளது. ஆதரவுவிரிவடைந்து உறுதிப்பட்டுள்ளது. பல படி முன்னணியில் உள்ளனர் என்றார் தியாகு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X