For Daily Alerts
Just In
இங்கிலாந்து நாவாலசிரியை ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு

16வது நூற்றாண்டைச் சேர்ந்த அவரது கதையான உல்ப் ஹால் நூலுக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.
57 வயதாகும் மேன்டல், லண்டனில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பவுண்டு மதிப்பிலான புக்கர் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
புக்கர் பரிசை இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் ஆகியோர் முன்பு பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஆண்டுப் போட்டியில், எந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1520களில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல் உல்ப் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது.