For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 2 நாள் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு

Google Oneindia Tamil News

சென்னையில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 16,17-12.2010 ஆகிய இருநாள்களில் நடைபெறுகின்றது.

சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் சொ.சகாதேவன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான சு. ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

மாநாட்டு அறிக்கையினை ந.அரங்கராசன் வழங்க, மாநாட்டின் நோக்கங்களை முனைவர் இரா. இளவரசு எடுத்துரைத்து உரையாற்றுவார்.

முன்னைப் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பரமசிவம் அவர்கள் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிட்டுத் தொடக்கவுரையாற்றுகின்றார். பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புரையாற்றுகின்றார்.

மாலையில் நடைபெறும் கருத்தரங்க அமர்வில் சமூக வலைத்தளங்கள் என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படிக்கின்றார்.

மூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுறும். அதன் பிறகு அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்குவர்.

17.12.2010 மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்குநர் ப. மணி அவர்கள் அன்னை பெரி.கனரஞ்சிதம் நினைவு விருது வழங்கி நிறைவுரையாற்றுகின்றார்.

மாலையில் நடைபெறும் கருத்தரங்க அமர்வில் சமூக வலைத்தளங்கள் என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படிக்கின்றார்.

நன்றி: http://muelangovan.blogspot.com

English summary
World Tamil teachers conference to be held in Chennai. Two day conference will beging tomorrow at Hotel Le Royal Meridien. Former School edication director Paramasivam, Chennai university VC Porko, Erode Tamilanban and others to participate. Dr. Mu. Elangovan will give a lecture on Social websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X