For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதறும் கேரள திருமணங்கள்!

Google Oneindia Tamil News

Kerala Weddings
கேரளாவில் திருமண குடும்ப உறவுகள் சிதைந்து சீர்குலைந்து வருவதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. விவாகரத்துகள் பெருகி விட்டனவாம். சேர்ந்து வாழும் முறைகள் பெரும் தோல்வியைத் தழுவி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுகளில் பதிவான விவாகரத்து கோரிய மனுக்கள் மட்டும் 11,600 ஆகும்.

இதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவில் விவாகரத்து கோரும் வழக்குகள் பல மடங்கு பெருகி விட்டனவாம்.

கேரளாவில் உள்ள 16 குடும்ப நல நீதிமன்றங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.

2005-06ல் மொத்தம் 8456 விவாகரத்து வழக்குகள் பதிவாகியிருந்தன. இது 2006-07ல் 9775 ஆக அதிகரித்தது. 2007-08ல் 9337 ஆக இது குறைந்தது. ஆனால் 2008-09ல் 11,194 ஆக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

2009-10ல் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 1505 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. திரூச்சூரில் 1022 வழக்குகள் பதிவாகயுள்ளன.

கேரள உயர்நீதிமன்றத்தின் பதிவேடு இதைக் கூறுகிறது.

மனமொத்து வாழும் தம்பதிகள் அருகி வருவதும், குடும்ப உறவுகள் மீதான பிடிப்புகள் குறைந்து வருவதும், எடுத்ததெற்கெல்லாம் சண்டை, விவாகரத்து என இளம் தம்பதிகள் கிளம்புவதுமே வழக்குகள் அதிகரிக்கக் காரணமாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X