முத்துக்குமார் நினைவு தினத்தை வீர வணக்க நாளாக அனுசரிக்க நெடுமாறன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த வீர இளைஞர் முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவு தினத்தை வீர வணக்க நாளாக அனைவரும் அனுசரிக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமாரின் முதலாண்டு நினைவு நாள் வருகிற 29-ம் தேதி வரவிருக்கிறது. முத்துக்குமாரின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 14பேரும் வெளிநாடுகளில் மூன்று பேரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்து அந்நாளில் தமிழகமெங்கும் வீரவணக்க நாள் கடை பிடிக்கும்படி உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் ஜனவரி 29-ம் நாள் அன்று முத்துக் குமார் மற்றும் தோழர்களின் நினைவு நாளை கடைப்பிடிக்கும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.

சென்னையில் முத்துக்குமார் வாழ்ந்த கொளத்தூரில் 29ஆம் தேதி மாலை நடைபெறவிருக்கும் வீர வணக்க நாள் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+