பொங்கல்: தென்மாவட்ட ரயில்கள் நிரம்பின-கூடுதல் சிறப்பு பயில்கள் விட கோரிக்கை
நெல்லை: பொங்கல் பண்டிகைக்கான தென்மாவட்ட சிறப்பு ரயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை சீசனுக்காக தெற்கு ரயில்வே பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயி்ல்கள் விட்டுள்ளது.
எத்தனை சிறப்பு ரயில்கள் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் இடங்கள் இல்லை. பொதிகை, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி, பாண்டியன், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, 13, 14 ஆகிய இரு நாட்களிலும் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியது. 16-ம் தேதி ஞாயிற்று கிழமை மாட்டு பொங்கலும், 17-ம் தேதி திங்கள் கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வருவதால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே பயணம் செய்ய திட்டமிட்டதையடுத்து ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் இடமில்லை.
தென்மாவட்டங்களுக்கு வழக்கமாகச் செல்லும் சில ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகமானதல் முன்பதிவு நிறுத்தப்பட்டது. அதனால் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications