For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் பாலஸ்தீன் ஆதரவு பொதுக்கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

Solidarity for Palestine programme held in Kuwait
குவைத்: தங்களுடைய சுதந்திரதிற்காகவும், உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினத்தை(நவம்பர் 29) முன்னிட்டு கடந்த 2ம் தேதி ஜம்மியத்துல் இஸ்லாஹி அல்இஜ்திமாயி ரவ்தா ஹாலில் மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டம் இரவு 7.15 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக ஏமன் நாட்டு சகோதரர் ஷேக் சாத் திருக்குர்ஆன் ஓதினார். அதன் தொடர்ச்சியாக ஜம்மியத்துல் இஸ்லாஹி சார்பாக டாக்டர். சுலைமான் சேட் உரை நிகழ்த்தினர். அவர் தனது உரையில் பாலஸ்தீனின் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை மக்களிடையே நினைவூட்டினார்.

அதில் "நபி (ஸல்) அவர்கள் மறுமை நாள் இஸ்லாமிய எழுச்சி வராமல் இருக்காது" என்ற ஹதீஸையும் கூறினார். மேலும் மஸ்ஜிதுல் அக்சா தான் நமது முதல் கிப்லா அது என்றும் நம் நினைவில் இருக்கும் அதற்காக அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்சாவை பாதுகாக்க வேண்டிய துவாவை கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து பாலஸ்தீன தேசத்து இளைஞர்கள் தாங்கள் படும் துன்பங்களை பற்றி எழுச்சி கீததின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினர். அதற்கு மக்களிடமிருந்து வந்த தக்பீர் முழக்கங்களும், கர ஒளியும் நாங்களும் பாலஸ்தீன மக்களோடு தான் உள்ளோம் என்பதை ஆணித்தரமாக வெளிபடுத்தியது.

தொடர்ச்சியாக இந்தியாவின் சார்பாக குவைதில் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபோரம்(KIFF) பிரதிநிதி சகோதரர் அப்துர் ரசாக் பேசியதாவது,

உலகிலேயே பாலஸ்த்தீனில் உள்ள காஸா என்ற பகுதியில் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது, மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெற கூடிய நாடும் பாலஸ்தீன் தான். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிகமாக இஸ்ரேலிய படைகளால் மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். மேலும் பாலஸ்தீனியர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேய அகதிகளாக வாழக்கூடிய அவலம் உள்ளது என்றார்.

அதன் தொடர்ச்சியாக ஐஎம்ஏ(IMA)ன் சார்பாக முஸ்லீம்களின் முதல் கிப்லாவை மீட்டே தீருவோம் என்று சிறுவர்களின் சார்பாக மேடை நாடகம் அரங்கேறியது.

அதைத் தொடர்ந்து சூடான் நாட்டின் சார்பாக சகோதரர் முஹமது மசூத் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பாலஸ்தீனின் பிரச்சனை முஸ்லிம்களுடைய பிரச்சனை. அல்லாஹ்வுடைய வழியில் போராடி யூதர்களை விரட்டி அடித்து பாலஸ்தீன மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் வாழ வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. அதற்காக அல்லாஹ்விடம் அழகான நற்கூலி காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதிநிதி சகோதரர் ஷேக் முஹம்மது அமீன்,ஏமன் நாட்டு சகோதரர் அப்துல்லாஹ் கொலனி, சோமாலிய நாட்டு சகோதரர் டாக்டர் முஹம்மது யூசுப், ஆப்கானிஸ்தான் நாட்டு சகோதரர் ஷேய்க் அன்வருல்லாஹ், எகிப்து நாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவி்த்தனர்.

இஸ்ரேலை பின்பற்ற கூடிய அனைவரும் அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவுவது உறுதி என்றும், பைத்துல் முகத்தஸை மீட்டே தீருவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய இலங்கை சகோதரர் முனாஸ் "இந்த வருடம் தான் நாம் எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுக்கிறோம், இது ஒரு முன்மாதிரி என்றும் பாலஸ்தீன மக்களுக்காக இலங்கை மக்களும், இலங்கை அரசாங்கமும் உதவ காத்துக் கொண்டிருக்கிறது" என்றும் கூறினார். அதன் பிறகு இலங்கை சார்பாக ஒரு காணொளி கண்பிக்கபட்டது.

இறுதியாக குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபோரத்தின் (KIFF) சார்பாக கையெழுத்து பிரதிகள் அனைவரிடமும் வாங்கப்பட்டது. அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் மேடையில் ஒன்றாக இணைந்து பாலஸ்தீன மக்களுக்காகவும், தங்களுடைய முதல் கிப்லாவையும் மீட்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

English summary
Solidarity for Palestine programme has been conducted on december 2 in Kuwait. Representatives from various countries attended that function and expressed their views about Palestine. Thousands of people attended the programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X