For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்

By Chakra
Google Oneindia Tamil News

Tiruchendur Temple
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலி்ல் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. ஜென்ம நட்சத்திரத்தில் முருகன் பிறந்ததை வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டில் 12 மாதாந்திர வெள்ளிக்கிழமைகளில் வழிபடும் பலன் இன்று ஒருநாளில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடையும் நிகழ்ச்சியும் அங்கு சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வருதலும் அதன்பிறகு தங்கதேரில் எழுந்தருளி கோயில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று வைகாசி விசாகத்தை ஓட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப திபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதன்பிறகு முருக பெருமானுக்கு பட்டுவஸ்திரம் சாத்தி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் மூலவருக்கு உச்சிகாலை பூஜை முடிந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விசாக திருவிழாவை ஓட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னிர் காவடி, சர்ப்பகாவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்தனர். இதுபோல் அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். கால்நடையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

English summary
A large number of devotees, numbering about two lakhs, participated in the Vaikasi Visagam festival yesterday. A procession of Sri Jayanthinathar with Valli and Deivanai is conducted in the night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X