For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையின் பிரதான சாலை சந்திப்புக்கு குலாம் மஹ்மூது பனாத்வாலா பெயரிடப்பட்டது

Google Oneindia Tamil News

Ghulam Mahmood Banatwala Chowk
மும்பை: மும்பை பிரதான சந்திப்பிற்கு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மறைந்த தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலாவின் பெயர் சூட்டப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் இ. அஹ்மது, முரளி தியோரா எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர். 1965-ம் வருடத்தில் மும்பை சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களை சந்தித்து தாய்ச் சபையில் இணைந்தார்.

ஆசிரியராக பணி துவங்கிய ஜி.எம். பனாத்வாலா சாஹிப் இரண்டு முறை மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அந்த காலகட்டத்தில் கருத்தடை சட்டம், வந்தே மாதரம் கட்டாயம் படிக்க வேண்டும் போன்ற சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர். எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான ஞானம் பெற்றவர். மிகச் சிறந்த பேச்சாளர். வாதத் திறமை மிக்கவர்.

இதனை கருத்தில் கொண்ட மறைந்த கேரள கேசரி சி.எச். முஹம்மது கோயாவின் வேண்டுகோளை ஏற்று தேசிய அரசியலில் பங்கேற்று மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

ஜி.எம். பனாத்வாலா சாஹிபால் முன் மொழியப்பட்ட ஷரீஅத் சட்ட தனிநபர் மசோதா ராஜீவ் காந்தி பாரதப் பிரதமராக இருந்தபோது இந்திய அரசால் எற்றுக் கொள் ளப்பட்டது.

ஷரீஅத் போராட்ட வீரராக விளங்கிய ஜி.எம். பனாத்வாலா சாஹிபை பாராட்டி தமிழக முஸ்லிம்கள் முஜாஹிதெ மில்லத் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தனர். உலகின் தாய் பாராளுமன்றமான பிரிட்டன் அரசு சிறந்த பாராளு மன்றவாதி என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது. ஜி.எம். பனாத்வாலா சாஹிப் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில மாநாடாகும்.

இந்திய முஸ்லிம்களின் இணையற்ற தலைவராக விளங்கிய முஜாஹிதெ மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிபின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு மும்பை யின் முக்கிய பகுதிகளில் உள்ள இப்ராஹீம் ரஹ்ம துல்லாஹ் மற்றும் இப் ராஹீம் மெர்ச்சன்ட் சாலைகளுக்கு இடையிலான சந்திப்பு பகுதிக்கு குலாம் மஹ்மூது பனாத்வாலா சவுக் என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி 16-10-2011 காலை 11 மணிக்கு முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்க தலைவர் டாக்டர் ஏ.ஆர். சோமர் தலைமையில் நடைபெற்றது. பெயர் பலகையினை முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய மனித வள மேம்பாடு மற்றும் வெளிவிவகார இணையமைச்சருமான இ. அஹ்மது சாஹிப் திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மிலிந்த் தியோரா, ஈ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், மவ்லானா ஆஜாத் பொருளாதார கழகத் தலைவர் அமீன் படேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் தஸ்தகீர், இப்ராஹீம் ஆகா, தேசிய செயலாளர்கள் குர்ரம் அனீஸ் உமர், இஸ்மாயில் பனாத் வாலா, முதன்மை மாநகராட்சி உறுப்பினர் அக்லாக் அன்சார், அலி முஹம் மது ஷம்ஷி, மும்பை மாநகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சி.எச். அப்துல் ரஹ்மான், யூசுப் ஹுசைன் முஜாவர், மாநி லத் தலைவர் சமீயுல்லாஹ் அன்சாரி உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

English summary
The Mumbai Corporation has named a chowk after late Gulam Mehmood Banatwala, former parliamentarian and president of Indian Union Muslim League. The crossing of Ibrahim Rahmatullah Road and Ibrahim M Merchant Road was named as G.M. Banatwala Chowk on 16th October. G.M. Banatwala served as Loks Sabha member for seven times and represented Ponnani (Kerala) constituency from Indian Union Muslim League. Eminent guests at the naming ceremony were E. Ahamed, National President IUML and Minister of State for External Affairs & HRD, Milind Deora MP, Murli Deora, Former Union Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X