For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ரோஸ்டிரேட் கேன்சருக்கு வயது 2250-எகிப்து மம்மி மூலம் கிடைத்த தகவல்!

Google Oneindia Tamil News

கெய்ரோ: 2,250 ஆண்டுகளுக்கு முன்பே ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2250 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து மம்மியாக பாதுகாக்கப்பட்டவர் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மம்மி ஒன்றின் உடலில் நடத்திய மருத்துவ சோதனையில், அந்த நபர் 2,250 ஆண்டுகளுக்கு முன் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் எம்-1 என்ற மம்மி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மம்மி குறித்த தகவல்களை பெற டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் முடிவில் அந்த நபர் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோய் தாக்கி இறந்தததாக தெரிய வந்தது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,

கண்டெடுக்கப்படட மம்மியின் கைகள் மடக்கிய நிலையில் புதைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இறந்தவர் ராஜ பாரம்பரையை சேர்ந்தவர் என்று தெரிகிறது. கி.மு.305 முதல் 30 வரை எகிப்தில் தாலமி மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ராஜ பாரம்பரையைச் சேர்ந்த ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த நபர் கி.மு.285 முதல் கி.மு.230 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம். மம்மியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. எம்-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மம்மி 5.5 அடி உயரம் உள்ளது.

மம்மியின் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் முடிவில், மம்மியாக பாதுகாக்கப்பட்ட அந்த நபர் ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோய் தாக்கி இறந்தது தெரிய வந்தது. எம்-1 நபர் இறப்பதற்கு முன் அவரது இடுப்பு மற்றும் தண்டுவர இணைப்பு பகுதியில் 0.03 மற்றும் 0.59 இன்ச் அளவில் புற்றுநோய் கட்டிகள் இருந்துள்ளது.

ப்ரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியால் தான் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் இறக்கும் போது 51 முதல் 60 வயது இருந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்றனர்.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 2,700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் ஒருவரின் எலும்புக் கூடு கடந்த 2007ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அவரும் புற்றுநோய் தாக்கி இறந்ததாக மருத்துவ சோதனைகளில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prostrate cancer seems to be a killer about some 2,250-years ago. A mummy kept in the National Archaeology Museum of Lisbon is found to have died of prostrate cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X