For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Women with banana
பெண்களின் பாலுணர்வுகளை தூண்டும் காய்கறிகளை தடை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் கட்டுரையில் எழுதியுள்ளார். ஆசைகளை தூண்டும் வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகளை பயன்படுத்த பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

அன்றாட உணவில் வாழைப்பழம், வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்குண்டு. அதிக சத்து நிறைந்த வாழைப்பழம், வெள்ளரிக்காய் எளிமையான, விலைகுறைவான உணவுப்பொருளாகும். ஆனால் இந்த பழமும், காயும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவை ஆண்களின் மர்ம உறுப்பை அவர்களுக்கு நினைவுபடுத்தும். அதன் மூலம் அவர்களுக்கு “செக்ஸ்” உணர்வு ஏற்படும்.

எனவே வெள்ளரிக்காய், வாழைப்பழம் போன்றவைகளை பெண்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளும் “செக்ஸ்” உணர்வை தூண்டக் கூடியவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காய்களை சமைத்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவற்றை முழுமையாக கொடுக்காமல் துண்டு துண்டாக நறுக்கி மறைமுகமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

மதகுருவின் இந்த கருத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த நபரால் மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே அவரை மதகுரு பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஆன்லைனில் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. எனவே வாய்க்கு வந்ததை உளறுகிறார். எனவே அவர் தனது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
An Islamic cleric residing in Europe said that women should not be close to bananas or cucumbers, in order to avoid any “sexual thoughts.” The unnamed sheikh, who was featured in an article on el-Senousa news, was quoted saying that if women wish to eat these food items, a third party, preferably a male related to them such as their a father or husband, should cut the items into small pieces and serve.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X