For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவகாரத்து பெற்ற தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை- இங்கிலாந்தில் புதிய சட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விவாகரத்து செய்த தந்தைகள் தங்களின் குழந்தைகளை சந்திக்க தடை விதித்து இங்கிலாந்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட் உள்ளது. டேவிட் நார்குரோவ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் இது குறித்து அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இங்கிலாந்தில் விவகாரத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை சந்திக்க சட்டம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தற்போது அந்த சட்டத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனது மனைவியை விவாகரத்து செய்த தந்தைகள் தங்கள் குழந்தைகளை சந்திக்கும் உரிமையை இழக்கின்றனர். இது குறித்து டேவிட் நார்குரோவ் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையின் சாராம்சம்:

இங்கிலாந்தில் மனைவியை விவாகரத்து செய்த ஆண்கள் 8 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது 2 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு 3 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் தாயின் பராமரிப்பில் வளர்கின்றனர். இந்த குழந்தைகளை அவர்களின் தந்தையர் அவ்வப்போது சந்திக்கின்றனர். தாயும், தந்தையும் ஒருங்கிணைந்து அன்பு செலுத்தவேண்டும் அதுதான் குழந்தைகளுக்கு நல்லுறவை ஏற்படுத்தும்.

சட்டம் விரைவில் அமல்

ஆனால் தாயிடம் வாழும் குழந்தைகளை தந்தை தனியாக வந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒருவித சோகத்தை ஏற்படுத்துகிறது. தாங்கள் ஒதுக்கப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இது அந்த குழந்தைகளின் மனதில் வெறித்தனம் மற்றும் கொடூர எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

எனவே விவாகரத்து செய்த தந்தைகள் தங்களது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கான உரிமையை அவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை புதிய சட்டமாக விரைவில் அமலாக உள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

English summary
Fathers who have gone through divorce or separation in the UK will not be granted a legal right to guarantee that their child has 'a meaningful relationship with both parents', according to a long-awaited report on family law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X