For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீக்கியர்கள் புனிதத்தளம் நான்தேடில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

Google Oneindia Tamil News

நான்தேட்: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீக்கியர்களின் புனித நகரமான நான்தேட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீக்கியர்களின் புனித நகரமான நான்தேட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 3.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3. 27 ஆக பதிவாகியது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடுகள் ஆட்டம் கண்டதும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு தெருக்குளுக்கு ஓடி வந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 17 தடவை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இது வரை உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

English summary
A mild quake measuring 3. 27 in Richter scale hit the famous sikh pilgrim city Nanded and its surrounding areas in Maharashtra at 3.17 am today. People got scared and they ran to the streets. As of now, there are no reports of casualities or damage to the property.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X