For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிப்படை வசதிகள் இல்லை-தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

Google Oneindia Tamil News

Hosur
ஓசூர்: ஓசூர் அருகே அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் வரும் சட்ட மன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஓசூர் அருகே உள்ள நீலவங்கா கிராமத்தில், 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 80 ஆண்டாக வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த போன்ற பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திரம் பெற்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இது வரை நீலவங்கா கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. இதனால் பஸ் போக்குவரத்தும் இல்லை.

விவசாய விளை பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க, தொரிப்பள்ளி ரேஷன் கடைக்கு 8 கி.மீ. நடந்தே செல்கினறனர்.

கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி மட்டும் உள்ளது. துவக்கப் பள்ளி முடிந்து உயர் கல்விக்கு சூளகிரி செல்ல வேண்டிய உள்ளதால், போக்குவரத்து வசதியில்லாமல், மாணவர்கள் துவக்கப் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விட்டனர்.

இதனால், அதிருப்தியடைந்த இந்த கிராம மக்கள் இம் முறை எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.

English summary
A village near Hosur has decided to boycott TN assembly polls. The villagers from Neelavanga have charged that they have no basic amenities for so many years. No proper road links and bus facilities, they charged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X