For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Human Evolution
நியாண்டர்தால் எனப்படும் ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்கால மனிதர்களைப்போல ஆதிமனிதர்களும் வேட்டையாடும் கருவிகளையும், மீன்பிடிக்கும் வலைகளையும் வைத்திருந்தனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்பு லிபியாவின் சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் உடல் அமைப்பை போன்ற எலும்பு கூட்டை புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்தனர். அது சுமார் 3 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்த அவர்கள் ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றியதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது மியான்மரில் புதிதாக 4 மனித பற்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது ஆதிகால மனிதனின் பல் என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து 6 வருடங்கள் நடத்திய ஆய்வுக்கு பிறகு மனிதன் ஆசியா கண்டத்தில் தான் முதன்முதலில் தோன்றினான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலு் ஆதி மனிதன் ஆசியாவில்தான் தோன்றினான். ஆப்பிரிக்காவில் இல்லை' என்றும் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

'அப்ராசியா டிஜிடே' என பெயரிடப்பட்ட புதைபடிவம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது. எனவே, ஆசியாவில் தோன்றிய மனிதன் இடம் பெயர்ந்து ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு முடிவு 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
The human family tree may have to be rewritten after scientists found evidence that the ancient ancestors of humans, apes and monkeys evolved in Asia - rather than Africa - tens of millions of years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X