For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜாவில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 141வ‌து க‌ல‌ந்துரையாட‌ல்

By Siva
Google Oneindia Tamil News

Ink committee
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 141வது கலந்துரையாடல் 28.09.2012 அன்று ஷார்ஜா அல்கத்தாரி பண்ணை இல்லத்தில் "ஆன்மீகமும் அறிவியலும்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

செல்வன்.சோமசுந்தரம் ஸ்ரீனிவாசன் இறைவணக்கம் பாட, அதைத் தொடர்ந்து சங்கப்பாடலை செல்வி. ஐஸ்வர்யா முத்துராமன் முழங்க செல்வி. ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன் குறளமுதம் வழங்கினார். அதையடுத்து உறுப்பினர்களின் குழந்தைகள் தங்களின் சொந்த ஊர் மற்றும் தங்கள் நகர கோவில்கள் பற்றிய சிறப்புகளையும் பெருமைகளையும் பற்றிய ப்ராஜெக்ட் செய்து அனைவர் முன்னிலும் விளக்கியது மிக சிறப்பாக இருந்தது.

சங்க செயலாளர் திரு. முத்துராமன் கதிரேசன் வரவேற்புரையாற்றினார். பின்னர் தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் தலைமை உரை ஆற்றினார். இதில் கூட்டமைப்பு தொடங்கிய வரலாறு மற்றும் கூட்டமைப்பின் குறிக்கோளையும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கினார். இதுவரை தாயகத்தில் உள்ளவர்களுக்கு உதவிய நிதிநிலை அறிக்கையை வாசித்தார். பின்னர் அடுத்து வரும் கலந்துரையாடல் பற்றி விளக்கிப் பேசினார்.

இக்கலந்துரையாடல் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்மீகமும் அறிவியலும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கவிஞர் திரு.தியாகராஜன், கவிஞர் திரு. மணிகண்டன் மற்றும் திருமதி விசாலாட்சி சண்முகம் கலந்துகொண்டு பேசினார்கள். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை திரு. நடராஜன் மற்றும் திருமதி. கோமதி நடராஜன் மிக சிறப்பாக நடத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். சங்கத்தின் முக்கிய நிகழ்வான தாயகத்தில் இருந்து உதவிகள் வேண்டி வந்த விண்ணப்பங்கள் பற்றி சங்கத் தலைவர் விளக்கினர். சங்க உறுப்பினர்கள் பலர் தங்களால் முடிந்த தனிநபர் உதவிகளை செய்தனர். மீதம் உள்ள விண்ணப்பங்கள் சங்கம் மூலம் உதவி செய்யலாம் என பொதுக்குழு மூலம் முடிவு செய்யப்பட்டது. பின்னர் உறுப்பினர் திரு. ராஜகணேஷ் ராமநாதன் நடத்திய "வார்த்தை விளையாட்டு" எனும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி நகைச்சுவையோடும் சிந்திக்கும் படியாகவும் அமைந்தது.

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் மாத இதழான "பெட்டகம்", "வைர ஓலை - 4" ஆகியவற்றை ஆசிரியர் திரு. ராஜகணேஷ் வெளிட்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக சங்க துணை செயலாளர் திரு. ராமநாதன் உடையப்பன் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

English summary
INK committee's general body meet cum get together was held at Al Qatary farm house in Sharjah on september 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X